TN Election 2026: 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… 2,650 தேடப்படும் குற்றவாளிகள் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழு, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 பாதுகாப்பு ஏற்பாடுகள்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நான்கு தேர்தல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழுவுடன் ஊடகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாகனக் கண்காணிப்பு மற்றும் சிவிஜில் ஆப் புகார்களுக்கான 24 மணிநேர ஜிபிஎஸ் கட்டுப்பாட்டு அறையும்,தேர்தல் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண் முலம் பெறப்படும் புகார்களை கண்காணிக்க மாநிலத் தொடர்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 20,757 உரிமம் பெற்ற துப்பாக்கிகளில் 3 ஆயிரம் துப்பாக்கிகள் தவிர்த்து அனைத்து துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 5, 938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தேடப்படும் குற்றவாளிகளில் 2,650 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறுபுறம், நெல்லை தொகுதிக்குட்பட்ட பாரதியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம் திருமண விழா வரவேற்பு போன்று அலங்கார மின் விளக்குகள், சிவப்பு கம்பள தரை விரிப்பு, வாழை மரம், பலூன்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் வாக்காளர்களின் செல்போன்களைப் பாதுகாக்க பிரத்யேக பைகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Thank You

Related Posts

தேர்தல் விதிமீறல் புகார்: முதலமைச்சர் செயலாளர் உமாநாத்துக்கு எதிராக ஆதாரங்கள் எங்கே? சென்னை உயர்நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 10:43 PM IST இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. முக ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக முதலமைச்சரின் செயலாளர் உமாநாத்துக்கு…

நாளை வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் : தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார் – Kumudam

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகைக்கு விரைவில் கல்தா? – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 8 views
தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகைக்கு விரைவில் கல்தா? – Kumudam

இளையராஜா போட்ட டியூன்.. கமல் ஆடிய டான்ஸ்! ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ இன்றும் ஹிட் ஏன்?

  • By admin
  • April 23, 2026
  • 7 views
இளையராஜா போட்ட டியூன்.. கமல் ஆடிய டான்ஸ்! ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ இன்றும் ஹிட் ஏன்?

TN Election 2026: 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… 2,650 தேடப்படும் குற்றவாளிகள் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 23, 2026
  • 3 views
TN Election 2026: 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… 2,650 தேடப்படும் குற்றவாளிகள் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்திற்கு தொடரும் சிக்கல்: தடை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 6 views
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்திற்கு தொடரும் சிக்கல்: தடை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!  – Kumudam

சட்டமன்ற தேர்தல் டாஸ்மாக் தொடர் விடுமுறை: அலார்ட் ஆகி ரூ.400 கோடிக்கு  சரக்குகளை வாங்கிய மதுப்பிரியர்கள்  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 9 views
சட்டமன்ற தேர்தல் டாஸ்மாக் தொடர் விடுமுறை: அலார்ட் ஆகி ரூ.400 கோடிக்கு  சரக்குகளை வாங்கிய மதுப்பிரியர்கள்  – Kumudam

2011 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவை தேர்வு செய்யாதது ஏன்?

  • By admin
  • April 23, 2026
  • 8 views
2011 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவை தேர்வு செய்யாதது ஏன்?
.site-info { display: none; }