கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக முதலமைச்சரின் செயலாளர் உமாநாத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், முதலமைச்சரின் செயலாளர் உமாநாத், மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் மோகன்தாஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முதலமைச்சரின் செயலாளர் உமாநாத் மீது குறிப்பிட்டு எந்த குற்றச்சாட்டுகளையும் மனுதாரர் முன்வைக்கவில்லை என்றும், அவர் தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
ஏப்ரல் 22, 2026 10:43 PM IST
தேர்தல் விதிமீறல் புகார்: முதலமைச்சர் செயலாளர் உமாநாத்துக்கு எதிராக ஆதாரங்கள் எங்கே? சென்னை உயர்நீதிமன்றம்