பேட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷன் தான் கேப்டனா நீடிக்கனும்.. காரணத்தை சொன்ன

ஹர்பஜன் சிங்

– விளம்பரம் –

இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் பேட் கம்மின்ஸ் காயமடைந்ததால் அவரால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை தொடர முடியாமல் போனது.

இஷான் கிஷன் கேப்டனாக தொடர வேண்டும் : ஹர்பஜன் சிங் கருத்து

அதன் காரணமாக இந்த தொடரின் துவக்க போட்டிகளில் இஷான் கிஷன் கேப்டனாகவும், அபிஷேக் ஷர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். இஷான் கிஷனின் தலைமையில் சிறப்பாக விளையாடி வரும் சன் ரைசர்ஸ் அணியானது கடைசியாக தாங்கள் விளையாடிய டெல்லி அணிக்கெதிரான போட்டியிலும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

– விளம்பரம் –

இவ்வேளையில் பேட் கம்மின்ஸ் காயத்திலிருந்து மீண்டு வந்து அணிக்கு திரும்பி இருப்பதால் அடுத்த போட்டியில் அவர் அந்த அணியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இவ்வேளையில் பேட் கம்மின்ஸ் அணிக்கு வந்தாலும் இஷான் கிஷன் தொடர்ச்சியாக கேப்டனாக செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இஷான் கிஷனை பொறுத்தவரை அவர் ஒரு இளம் கேப்டன். தற்போது அவர் வீரர்களை ஒன்றிணைத்து சிறப்பாக விளையாடி வருகிறார். பேட் கம்மின்ஸ் அற்புதமாக கேப்டன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரது தலைமையில் 2024 ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி வரை அந்த அணி சென்றுள்ளது. ஆனாலும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இஷான் கிஷனை தொடர்ச்சியாக கேப்டனாக நீட்டிக்க வேண்டும்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : 2011 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவை தேர்வு செய்யாதது ஏன்? – ஸ்ரீகாந்த் விளக்கம்

அவர் தற்போதுள்ள அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் இதர வீரர்களிடம் நல்ல பிணைப்பில் உள்ளார். எனவே அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது இஷான் கிஷனுக்கு தெரியும். அதன் காரணமாக அவரே கேப்டனாக நீடிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

Vastu Tips in Tamil : ஒரு நாள் நல்லா தொடங்கினா, அந்த நாள் முழுக்க நல்லா போகும். ஆனா காலையில எழுந்ததும் நாம செய்யுற சில சின்ன தவறுகள், அந்த நாள் முழுவதையும் பாதிக்கும். காலையில் நாம் விழிக்கக்கூடாத 5…

சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா

– விளம்பரம் – அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் 99…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

பேட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷன் தான் கேப்டனா நீடிக்கனும்.. காரணத்தை சொன்ன

  • By admin
  • April 22, 2026
  • 10 views
பேட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷன் தான் கேப்டனா நீடிக்கனும்.. காரணத்தை சொன்ன

தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 12 views
தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

  • By admin
  • April 22, 2026
  • 2 views
Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 9 views
“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

AWS சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் தேர்வில் தேர்ச்சி பெறுங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 16 views
AWS சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் தேர்வில் தேர்ச்சி பெறுங்கள் – TN செய்திகள்

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 3 views
தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }