– விளம்பரம் –
கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. 1983-ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலககோப்பை தொடரை வென்ற பின்னர் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து தோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலககோப்பையை கைப்பற்றும் போது நாடே மிகப்பெரிய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. அந்த 2011 உலககோப்பை தொடரில் இளம் வீரரான விராட் கோலி இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு முன்னதாக அறிமுகமான ரோகித் சர்மா இடம்பெறாமல் போனது அப்போதே பேசு பொருளாக மாறியிருந்தது.
ரோஹித் சர்மாவை தேர்வு செய்யாதது ஏன் : ஸ்ரீகாந்த் விளக்கம்
இதுவரை ரோகித் சர்மா இரண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இரண்டு டி20 உலக கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்து விளையாடி இருந்தாலும் ஒருநாள் உலககோப்பையை வென்றதில்லை. அந்த ஏக்கம் இதுவரை அவரிடம் உள்ளது. 2023 50 ஓவர் உலக கோப்பை தொடரில் கூட அவரது தலைமையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது. அதனால் இதுவரை ஒருநாள் உலககோப்பை தொடரை வெல்ல முடியாமல் ஏக்கத்தில் இருக்கிறார்.
– விளம்பரம் –
அதன் காரணமாகவே எதிர்வரும் 2027 ஒருநாள் உலககோப்பை வரை விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 2011-ஆம் ஆண்டு உலககோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தான் ஏன் ரோகித் சர்மாவை அந்த தொடருக்கு தேர்வு செய்யவில்லை? என்பது குறித்து தெளிவான தகவலை விளக்கியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் இன்றளவும் ரோகித் சர்மாவை அந்த உலககோப்பை அணியில் தேர்வு செய்யாதது குறித்து வருந்துகிறேன். இதுகுறித்து அவரிடமும் நேரில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். ஆனாலும் நான் அவரை அந்த உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யாததற்கு காரணம் யாதெனில் : 1983 உலக கோப்பை தொடரை இந்திய அணி வென்ற போது அதிகளவில் ஆல்ரவுண்டர்கள் இடம் பிடித்திருந்தனர்.
– விளம்பரம் –
அதுபோன்ற ஒரு அணியை கட்டமைக்கவே 2011 உலக கோப்பை தொடரிலும் அதிகளவு ஆல்ரவுண்டர்களை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன் காரணமாகவே முழுநேர பேட்ஸ்மேனான ரோகித் சர்மாவை நீக்க வேண்டியிருந்தது. 2011 உலககோப்பை தொடரில் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் தான் தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார்.
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ
அதேபோன்று தேவைப்படும்போது சேவாக், சச்சின், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் என பல்வேறு பேட்ஸ்மேன்கள் ஆல்ரவுண்டர்களாக பந்துவீச்சிலும் கை கொடுத்தனர். இதன் காரணமாகவே நம்மால் கோப்பையை கைப்பற்ற முடிந்தது. அந்த ஒரே காரணத்தில் தான் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்க முடியாமல் போனது என ஸ்ரீகாந்த் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்