நாளை வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் : தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார் – Kumudam

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காவல்துறையினர், துணை ராணுவத்தினர், தீயணைப்புப் படையினர், வனத்துறையினர், சிறைத்துறையினர், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 1.47 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பாதுகாப்பு பணிக்காக 295 கம்பெனிகளைச் சேர்ந்த சுமார் 23 ஆயிரம் துணை ராணுவப்படையினர் தமிழகம் வந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இதில் 26,203 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்,சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 94,598 தலைமைக் காவலர்கள், காவலர்கள் அடங்குவார்கள். அதேபோல சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12,150 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துணை ராணுவத்தினர், போலீசார் தவிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவலர், ஓய்வு பெற்ற வன காவலர் ஆகியோர் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.

வாக்குப் பதிவு அன்று மாநிலம் முழுவதும் அதிரடிப்படை வீரர்கள் 514 வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள், ஏதாவது ஒரு பகுதியில் பிரச்னைகள் ஏற்பட்டால், அங்கு விரைந்து சென்று, சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிப்பு இல்லாத வகையில் பார்த்துக் கொள்வார்கள். இதேபோல காவல் துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், டி.ஐ.ஜி., ஐ.ஜி.,காவல் ஆணையர்கள் ஆகியோருடன் 1,100 வாகனங்களில் அதிவிரைப்படையினர் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 6,300 பகுதிகள் பதற்றம் நிறைந்த இடங்களாக அறியப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிக பண புழக்கம் உள்ள கண்டறியப்பட்டுள்ள 118 தொகுதிகளிலும், அதிகமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதே போல, சென்னை காவல்துறைக்குட்பட்ட 24 சட்டமன்ற தொகுதிகளில் 198 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Thank You

Related Posts

தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 7:49 PM IST சாய்குமாரை தமிழக தலைமை செயலாளராக நியமித்த தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த பொது நல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக…

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 2:58 PM IST சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. கோப்பு படம் வாக்குப்பதிவை முன்னிட்டு, சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

நாளை வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் : தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார் – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 7 views
நாளை வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் : தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார் – Kumudam

Adaiyalam Yeralam | Naatpadu Theral – 07 | Vairamuthu | Vagu Mazan | Anthony Daasan | Selvakannan – Ahatamil

  • By admin
  • April 22, 2026
  • 6 views
Adaiyalam Yeralam | Naatpadu Theral – 07 | Vairamuthu | Vagu Mazan | Anthony Daasan | Selvakannan – Ahatamil

பாஜக அமைச்சரை  நடுரோட்டில் அக்ரோஷமாக கேள்வி கேட்டு  அலற விட்ட வீரமங்கை  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 7 views
பாஜக அமைச்சரை  நடுரோட்டில் அக்ரோஷமாக கேள்வி கேட்டு  அலற விட்ட வீரமங்கை  – Kumudam

பேட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷன் தான் கேப்டனா நீடிக்கனும்.. காரணத்தை சொன்ன

  • By admin
  • April 22, 2026
  • 11 views
பேட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷன் தான் கேப்டனா நீடிக்கனும்.. காரணத்தை சொன்ன

தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 14 views
தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

  • By admin
  • April 22, 2026
  • 3 views
Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!
.site-info { display: none; }