Adaiyalam Yeralam | Naatpadu Theral – 07 | Vairamuthu | Vagu Mazan | Anthony Daasan | Selvakannan – Ahatamil

கல்யாணப் புடவையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தன் காதல் நினைவுகளைக் கடந்து போகிறாள் கல்யாணப் பெண் ஒருத்தி. காதலர்களின் பழைய காதல் அடையாளங்கள் வழியெல்லாம் வலம் வருகின்றன.

*
Naatpadu Theral is a 100 song project by Kavipperarasu Vairamuthu. 100 Composers – 100 singers – 100 Directors.

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள். வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள்.
*

Song : Adayaalam Aeraalam

Lyricist: Vairamuthu

இசையமைப்பாளர்: வாகு மசான்

பாடியவர்: அந்தோணி தாசன்வாகு மசான்

இயக்குனர்: செல்வகண்ணன்

தயாரிப்பு: வைரமுத்து

பாடல் வரிகள் :

அடையாளம் ஏராளம்

ஆளெங்க? பேரெங்க?

நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்

நீயெங்க? நானெங்க?

கும்பி எரியுதடி

கொந்தளிக்கும் எம்மனசில்

தும்பி பறக்குதடி தோணுதடி

பழையகதை அடையாளம் ஏராளம்

ஆளெங்க? பேரெங்க?

நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்

நீயெங்க? நானெங்க?

கும்பி எரியுதய்யா

கொந்தளிக்கும் எம்மனசில்

தும்பி பறக்குதய்யா

தோணுதய்யா பழையகதை

* மின்னல் வெட்டும் ராத்திரியில்

சன்னல் பக்கம் நீஅழைக்க

அந்நேரம் பாத்து அஞ்சாறு

நாய் கொலைக்க வெறிச்சோடிப்

போயிருந்த வீதியில நான்விழுந்து

தெறிச்சோடிப் போனதுக்குத்

தெருவிளக்கு அடையாளம்

சொட்டாங்கல்லு ஒண்ணு – எந் தொடைப்பக்கம்

தவறிவிழ கல்லெடுக்கும் சாக்குல

நீ கள்ளத்தனம் பண்ண

ஆடி விழுந்ததுக்கும்

ஆளவிடு சாமியின்னு

ஓடி ஒளிஞ்சதுக்கும்

ஓடைக்கரை அடையாளம்

* சீலகட்டத் தெரியாத

சிறுமியின்னு பாக்காம

வேளகெட்ட வேளையில

வெறிகொண்டு நீயணைக்க

மாமான்னு மிரண்டதுக்கும்

மணமாலை கேட்டதுக்கு

ஆமான்னு சொன்னதுக்கும்

அம்மன்கோயில் அடையாளம்

ஊருக்கே தெரியாம

யாருக்கோ பெண்டாகிக் குதிரைவண்டி

ஏறிக் கொடிக்கால் கடக்கையில

மடிவிழுந்த கண்ணீரு

மழையாகிப் போனதுக்கு

இடிவிழுந்த ஆலமரம்

இன்னைக்கும் அடையாளம்

Thank You

Related Posts

“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “எனக்கு முன்பெல்லாம் பிரியாணிதான் பிடிக்கும். நாம் இளமையாக இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த…

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மலையாளத் திரையுலகின் மூத்த நடிகரும், பன்முகத் திறமையாளருமான ஸ்ரீனிவாசன் (69), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். தேசிய மற்றும் கேரள அரசின் உயரிய விருதுகளைப் பெற்ற இவரின் மறைவு, திரைத் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீனிவாசனின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

நாளை வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் : தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார் – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 6 views
நாளை வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் : தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார் – Kumudam

Adaiyalam Yeralam | Naatpadu Theral – 07 | Vairamuthu | Vagu Mazan | Anthony Daasan | Selvakannan – Ahatamil

  • By admin
  • April 22, 2026
  • 7 views
Adaiyalam Yeralam | Naatpadu Theral – 07 | Vairamuthu | Vagu Mazan | Anthony Daasan | Selvakannan – Ahatamil

பாஜக அமைச்சரை  நடுரோட்டில் அக்ரோஷமாக கேள்வி கேட்டு  அலற விட்ட வீரமங்கை  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 7 views
பாஜக அமைச்சரை  நடுரோட்டில் அக்ரோஷமாக கேள்வி கேட்டு  அலற விட்ட வீரமங்கை  – Kumudam

பேட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷன் தான் கேப்டனா நீடிக்கனும்.. காரணத்தை சொன்ன

  • By admin
  • April 22, 2026
  • 11 views
பேட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷன் தான் கேப்டனா நீடிக்கனும்.. காரணத்தை சொன்ன

தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 14 views
தமிழக தலைமை செயலாளர் நியமனம்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் உத்தரவு! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

  • By admin
  • April 22, 2026
  • 3 views
Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!
.site-info { display: none; }