கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்திற்கு தொடரும் சிக்கல்: தடை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!  – Kumudam

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அவரது 26வது படமான ‘வா வாத்தியார்’ திரைப்படம் மீதான தடையை நீக்கக் கோரி, தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

கடன் விவகாரமும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவும்

மறைந்த தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடன் வாங்கியிருந்தார். தற்போது அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துகளைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார்.

இதற்கிடையில், ஞானவேல்ராஜா கடன்தொகையைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால், ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். கடன்தொகையில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் மட்டுமே படத்தின் மீதான தடையை நீக்க முடியும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர். ஆனால், ஞானவேல்ராஜா கடன்தொகையைச் செலுத்தாததால், நீதிமன்றம் விதித்த தடையை நீட்டித்துத் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றமும் மனு தள்ளுபடியும்

கடனைத் திரும்பச் செலுத்தும் வரை படத்தின் தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில், ‘வா வாத்தியார்’ திரைப்படம் மீதான தடையை நீக்கக் கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

Thank You

Related Posts

Adaiyalam Yeralam | Naatpadu Theral – 07 | Vairamuthu | Vagu Mazan | Anthony Daasan | Selvakannan – Ahatamil

கல்யாணப் புடவையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தன் காதல் நினைவுகளைக் கடந்து போகிறாள் கல்யாணப் பெண் ஒருத்தி. காதலர்களின் பழைய காதல் அடையாளங்கள் வழியெல்லாம் வலம் வருகின்றன. * Naatpadu Theral is a 100 song project by…

“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “எனக்கு முன்பெல்லாம் பிரியாணிதான் பிடிக்கும். நாம் இளமையாக இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகைக்கு விரைவில் கல்தா? – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 6 views
தலைவர் பதவியிலிருந்து செல்வபெருந்தகைக்கு விரைவில் கல்தா? – Kumudam

இளையராஜா போட்ட டியூன்.. கமல் ஆடிய டான்ஸ்! ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ இன்றும் ஹிட் ஏன்?

  • By admin
  • April 23, 2026
  • 7 views
இளையராஜா போட்ட டியூன்.. கமல் ஆடிய டான்ஸ்! ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ இன்றும் ஹிட் ஏன்?

TN Election 2026: 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… 2,650 தேடப்படும் குற்றவாளிகள் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 23, 2026
  • 2 views
TN Election 2026: 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… 2,650 தேடப்படும் குற்றவாளிகள் கைது | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்திற்கு தொடரும் சிக்கல்: தடை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 6 views
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்திற்கு தொடரும் சிக்கல்: தடை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!  – Kumudam

சட்டமன்ற தேர்தல் டாஸ்மாக் தொடர் விடுமுறை: அலார்ட் ஆகி ரூ.400 கோடிக்கு  சரக்குகளை வாங்கிய மதுப்பிரியர்கள்  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 8 views
சட்டமன்ற தேர்தல் டாஸ்மாக் தொடர் விடுமுறை: அலார்ட் ஆகி ரூ.400 கோடிக்கு  சரக்குகளை வாங்கிய மதுப்பிரியர்கள்  – Kumudam

2011 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவை தேர்வு செய்யாதது ஏன்?

  • By admin
  • April 23, 2026
  • 8 views
2011 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவை தேர்வு செய்யாதது ஏன்?
.site-info { display: none; }