திமுகவில் இணைந்த ஓபிஎஸ்… திருமாவளவன் சொன்ன கமெண்ட் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது மதசார்பற்ற கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் என திருமாவளவன் கூறினார்.

ஓபிஎஸ் - திருமாவளவன்
ஓபிஎஸ் – திருமாவளவன்

ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தன் மூலம் மதசார்பற்ற கூட்டணிக்கு மேலும் வலிமை கூடியதாக நான் நம்புகிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தனது அரசியல் நிலைப்பாட்டை தை மாதத்தில் தெரிவிப்பதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். தை மாதம் முழுவதும் மவுனம் காத்த அவர், பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சராக பணியாற்றியவர். அதிமுகவை ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இயங்க செய்வதில் ஆர்வம் காட்டியதை நாடு அறியும். ஆனால் அவரது முயற்சி அங்கு வெற்றி பெற வில்லை. இந்த நிலையில் பா.ஜ.க. போன்ற கட்சிகளில் சேராமல் மீண்டும் ஒரு திராவிட பாசறையில் இணைந்து கொண்டார். இதன் முலம் அவர் மீது நன்மதிப்பை உயர்த்துகிறது.

பா.ஜ.கவுடன் நெருக்கமாக இருக்கிறார், அந்த கட்சியின் சொல்படி செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் இருந்தன. ஆனால் ஒ.பன்னீர்செலவம் எடுத்து உள்ள முடிவு நிதானமானவர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயல்லிதா ஆகிய தலைவர்களின் வழி வந்தவர் என்பதை உறுதிப்படுத்த கூடிய வகையில் திமுக என்ற திராவிட இயக்கத்தில் இணைத்து கொண்டார். திமுக மட்டுமில்லாமல் மதசார்பற்ற கூட்டணியை வலிமைப்படுத்திகிறார் என்ற வகையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திமுகவுடன் 28ந் தேதி பேச்சுவார்த்தை நடக்கலாம் என்றார்கள். ஆனால் ஊரில் நான் இல்லாததால் மார்ச் 2ந் தேதி பேச்சுவார்த்தை நடக்கும். என்னுடைய தலைமையில் முன்னணி தோழர்கள் கலந்து கொள்வோம். இது மெகா கூட்டணி. எல்லா கட்சிகளும் இணைந்து கொண்டு உள்ளன. எல்லாவற்றையும் சீர் தூக்கி பார்த்து அனைவருக்கும் உரிய வாய்ப்பை கூட்டணி தலைவராக உள்ள முதலமைச்சர் வழங்குவார். எல்லாரையும் அரவணைப்பார்.

காங்கிரஸ் கட்சி தேசிய கட்சியாக இருப்பதால் டெல்லியில் உள்ள தலைமை தான் முடிவு எடுக்கும். அங்கிருந்து வரும் தகவல்களுக்குபதில் சொல்லலாம். காங்கிரஸ் கட்சியில் மாற்று கருத்து சொல்பவர்கள் வழக்கம். அதை வைத்து கருத்து சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.



Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?
.site-info { display: none; }