”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மகளிர் உரிமைத் தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு போன்ற திட்டங்களை செயல்படுத்தி நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொண்டார். இந்தப் பரப்புரையின் போது பேசிய ராகுல் காந்தி, எங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் ஆளப்பட வேண்டும், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் பாஜக அப்படி நினைப்பதில்லை. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, தமிழ்நாட்டில் இருந்து ஆளப்பட வேண்டும். ஆனால் அரசியல் சாசன சட்டம் சொல்வதை பாஜக ஏற்றுக்கொள்வதில்லை. பாஜக டெல்லியில் இருந்து கொண்டு தமிழ்நாட்டை ஆள நினைக்கிறது.

மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இவை அனைத்திற்கும் பாஜக தான் காரணம். அதிமுக தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய பங்காற்றி உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் தற்போது அதிமுக கட்சி என்பது பாஜக தமிழகத்தில் நுழையும் கருவியாக மாறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழ்நாட்டை பினாமிகளை வைத்து ஆட்சி செய்ய முயற்சிக்கிறது.

தமிழர்கள் ஒரு நாளும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் சரணடைய மாட்டார்கள் என்பது தெரியும். அதனால் அதிமுக மூலமாக தமிழ்நாட்டை ஆள நினைக்கிறார்கள். திராவிட சித்தாந்தத்தை பாஜக வெறுக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பாஜக தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வர முயற்சி செய்தது. நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களுக்கு இருக்கும் பிரதிநிதித்துவத்தை கட்டுப்படுத்துவதே அவர்கள் நோக்கமாக உள்ளது.

Thank You

Related Posts

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 9 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?
.site-info { display: none; }