நீலகிரி ஹோம் ஸ்டே சீல் வைத்த உத்தரவில் தலையிட ஹைகோர்ட் மறுப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல் வைத்த உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், ஊட்டியில் அமைந்துள்ள ஹோம் ஸ்டே விடுதிகளை ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள், உரிமம் இன்றி செயல்பட்டதாக கூறி ஆகாஷ் ரூமஸ் அண்ட் காட்டேஜஸ் மற்றும் கோல்டன் லர்ச் ரெஸிடன்சி ஆகிய இரு விடுதிகளுக்கு சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ள நிலையில் முன்னறிவிப்பு இல்லாமல் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இரு விடுதிகள் சார்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால், கட்டடத்தை பயன்படுத்த கூடாது என கடந்த ஆண்டு ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியும், அதை அமல்படுத்தாததால் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த உத்தரவை எதிர்த்து அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சீல் வைத்ததை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, சிறப்பு அமர்வின் உத்தரவை அமல்படுத்தியதில் விதிமீறல் இருந்தால் மனுதாரர்கள், அதை சம்பந்தப்பட்ட சிறப்பு அமர்வின் கவனத்துக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தை சிறப்பு அமர்வு கண்காணித்து வரும் நிலையில், அதுதொடர்பாக இந்த அமர்வு ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது சிறப்பு அமர்வு விசாரணை நடைமுறைகளை பாதிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

சீல் வைத்த உத்தரவுக்கு எதிராக அரசிடம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அவகாசம் வழங்காமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதில் தற்போதைய நிலையில் தலையிட முடியாது என கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தனர்.

Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 14 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?
.site-info { display: none; }