“தமிழ்நாட்டு மக்கள்… கலாச்சாரம் குறித்த புரிதல் விஜய்க்கு இல்லை…” – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

“தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம், அரசியல் பற்றிய முழுமையான புரிதல் விஜய்க்கு இருப்பதாக தெரியவில்லை. விஜயகாந்த், கமல் போன்றுதான் விஜய்யும்” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

செய்தி18
செய்தி18

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் குறித்தும், தவெக தலைவர் விஜய் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜகவின் வேட்பாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக பாஜகவுக்கு தொகுதி பங்கீடு செய்ததைத் தொடர்ந்து மயிலாப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர் தமிழிசையும் இருந்தார். அந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழிசைதான் வேட்பாளாரா எனும் கேள்வி எழுந்த நிலையில், அதனை பாஜக தலைமை அறிவிக்கும் என தமிழிசை பதில் கொடுத்தார்.

இதேபோல் கடந்த முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த முறை, தான் சாத்தூரில் போட்டியிடுவதாக அறிவித்தார். வானதி சீனிவாசன் தொகுதி மாறுவது, அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைக்குமா என பாஜக வேட்பாளர்கள் பட்டியல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வேட்பாளர்கள் பட்டியல் இரண்டு தினங்களில் முடிவாகி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து விஜய் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம், அரசியல் பற்றிய முழுமையான புரிதல் விஜய்க்கு இருப்பதாக தெரியவில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக பல ஆண்டுகள் உழைத்து, அரசியல் அனுபவம் பெற்று முதலமைச்சரானார்கள். விஜய் தனது கனவு உலகில் இருக்கிறார் என நினைக்கிறேன். அவர் தனது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். ஆனால், அது வாக்குகளாக மாறாது. விஜயகாந்த், கமல் போன்றுதான் விஜய்யும். அவர் மூன்று முதல் நான்கு தொகுதிகளுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 10 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?
.site-info { display: none; }