தேவ்தத் படிக்கல்லின் மாபெரும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி





வைபவ் சூர்யவன்ஷி மற்றும் படிக்கல்


– விளம்பரம் –

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயதில் வைபவ் சூர்யவன்சி ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமானார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியிருந்தார். அதோடு தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்த அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 35 பந்துகளில் சதம் அடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருந்தார். இப்படி அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் அவர் தொடர்ச்சியாக ரன் குவித்து வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. பெரிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும், பெரிய அணிகளுக்கு எதிராகவும் அவர் அதிரடியாக விளையாடுவது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருவதோடு இந்திய அணிக்காக அவர் விரைவில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற ஆதரவுகளையும் குவித்து வருகிறது.

– விளம்பரம் –

அந்த வகையில் இந்திய அணிக்காக அவர் இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகவும் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய காத்திருக்கும் அவர் தேவ்தத் படிக்கலின் மாபெரும் சாதனை ஒன்றினை தகர்க்கும் வாய்ப்புக்காகவும் காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

டி20 கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக இந்திய வீரர் சார்பாக அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தேவ்தத் படிக்கல் தன்வசம் வைத்துள்ளார். படிக்கல் டி20 போட்டிகளில் 25 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டியிருந்தார். இவ்வேளையில் வைபவ் சூர்யவன்ஷி இதுவரை 23 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள வேளையில் 901 ரன்கள் குவித்துள்ளார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : கிரிஸ் கெயில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்து விராட் கோலி நிகழ்த்தவுள்ள – மாபெரும் சாதனை

இதன் காரணமாக நாளைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவர் 99 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை பூர்த்தி செய்து டி20 போட்டிகளில் இந்திய வீரர் சார்பாக அதிவேகமாக 1000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளது. ஒருவேளை நாளைய போட்டியில் அவரால் இந்த சாதனையை முறியடிக்க முடியாமல் போகும் பட்சத்தில் அடுத்த போட்டியில் ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்து தேவ்தத் படிக்கலுடன் சமன் செய்யும் வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

3 விக்கெட் விழுந்ததும் எங்களோட திட்டம் இதுதான்.. பெங்களூரு அணியை வீழ்த்திய பிறகு

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி…

வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 9 views
40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • By admin
  • April 19, 2026
  • 8 views
அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

  • By admin
  • April 19, 2026
  • 7 views
சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

  • By admin
  • April 19, 2026
  • 6 views
ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
.site-info { display: none; }