– விளம்பரம் –
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த தீபக் சாஹர் சி.எஸ்.கே அணியில் விளையாடும் போது பவர்பிளே ஓவர்களில் பந்துவீசம் ஸ்பெஷலிஸ்ட் பவுலராக செயல்பட்டு வந்தார். சி.எஸ்.கே அணியில் அவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வந்த வேளையில் கடந்த 2024 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் அவர் அந்த அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு மெகா ஏலத்தில் பங்கேற்றார். அப்படி மெகா ஏலத்தில் பங்கேற்ற அவரை மும்பை இந்தியன்ஸ் அணியானது பெரிய தொகை கொடுத்து தங்களது அணிக்குள் கொண்டு வந்தது.
தீபக் சாஹர் நிகழ்த்திய மோசமான சாதனை :
ஆனால் கடந்த ஆண்டு காயம் காரணமாக பல போட்டிகளை தவறவிட்ட அவர் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில் விளையாடி வரும் தீபக் சாகர் தொடர்ந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது மும்பை அணியின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
– விளம்பரம் –
அதிலும் குறிப்பாக நேற்று மும்பை வன்கடே மைதானத்தில் நடைபெற்ற 24-வது லீக் போட்டியின் போது பஞ்சாப் அணிக்கு எதிராக 2.3 ஓவர்கள் வீசிய தீபக் சாஹர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 45 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான பந்துவீச்சாள வெளிப்படுத்தி இருந்தார்.
அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் போது முதல் ஓவரை வீசி அவர் 21 ரன்களை விட்டுக் கொடுத்ததன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் எந்த ஒரு பவுலரும் செய்யாத மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அப்படி தீபக் சாஹர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது முதல் ஓவரை வீசியவர் 21 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : கே.கே.ஆர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானேவை நீக்கிவிட்டு இவரை கேப்டன் ஆக்குங்க – ஸ்ரீகாந்த் கருத்து
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் முதல் ஓவரில் 22 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இப்படி ஐ.பி.எல் தொடரின் ஒரு சீசனில் இரண்டு முறை யாரும் முதல் ஓவரில் 20 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தது கிடையாது. அப்படி விட்டுக் கொடுத்த முதல் பவுலர் என்ற மோசமான சாதனையை தீபக் சாஹர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்