தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

அஜித்தின் பந்தயப் பயணம்

அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் ரேஸிங்கில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த குழுவை உருவாக்கியுள்ளார். இந்தக் குழு துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

அண்மையில், மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸிலும் அவர் தன் குழுவினருடன் கலந்துகொண்டார். மேலும், ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித்குமார் 3-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தயப் போட்டிகளிலும் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்கிறது.

ஆவணப்படத்தின் தலைப்பும் வெளியீடும்

அஜித்குமாரின் இந்த கார் ரேஸிங் பயணம் ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ‘Racing Isn’t Acting’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

தற்போது இந்த ஆவணப் படத்தின் டீஸர் வெளியாகி, அஜித்தின் ரேஸிங் பயணத்தின் தீவிரத்தையும் அனுபவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்

சினிமா வெற்றிகள் ஒருபுறம் இருக்க, அஜித்குமாரின் ரேஸிங் திறமைக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது. பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்த ஆண்டுக்கான “GENTLEMAN DRIVER OF THE YEAR 2025” என்ற ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thank You

Related Posts

Tamil Eezha Kaatrea | Naatpadu Theral 04 | Vairamuthu | IsaiArasan | Sathyaprakash | Jeeva Mugunthan – Ahatamil

இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பல் இப்பாடல். கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் –…

விஜய்க்கு வில்லனாகும் சிவகார்த்திகேயன் : ஜனநாயகன் vs பராசக்தி மோதல் – Kumudam

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது. பொங்கல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 9 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • By admin
  • April 19, 2026
  • 7 views
அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

  • By admin
  • April 19, 2026
  • 6 views
சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

  • By admin
  • April 19, 2026
  • 5 views
ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
.site-info { display: none; }