சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) vs சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) போட்டியின் சிறப்பம்சங்கள்: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று சனிக்கிழமை 2 ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் பிற்பகல் 3:30 மணிக்கு பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடந்த 26-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் 27-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங்

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஜோடி தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டாத் தொடங்கி இந்த ஜோடியில் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா 15 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். இதேபோல், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரியை விரட்டிய ஹெட்  23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் இஷான் கிஷன் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். சிக்ஸர்களை பறக்கவிட்டு வான வேடிக்கை காட்டி வந்த அபிஷக் 22 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சென்னை அணியின் மிரட்டல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னுக்கு அவுட் ஆனார். தனி ஒருவனாக அதிரடி காட்டி வந்த ஹென்ரிச் கிளாசென் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 39 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ஐதராபாத் அணி 194 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் வீசிய அன்ஷுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டையும், முகேஷ் சவுத்ரி 2 விக்கெட்டையும், குர்ஜப்னீத் சிங் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

195 ரன்கள் வெற்றி இலக்கு

தொடர்ந்து, 195 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கினர். அணிக்கு வலுவான அடித்தளம் போட முயற்சித்த இந்த ஜோடியில், ஒரு சிக்ஸரை பறக்க விட்ட சஞ்சு 7 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக இணைந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் – ஆயுஷ் மத்ரே ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றினர். இதில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரி என அதிரடி காட்டிய ஆயுஷ் மத்ரே 30 ரன்னுக்கு அவுட் ஆனார்.

3 பவுண்டரியை மட்டுமே விரட்டிய கேப்டன் ருதுராஜ் 19 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த சர்ஃபராஸ் கான் 25 ரன்னுக்கும், டெவால்ட் ப்ரீவிஸ் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் இணைந்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்த மேத்யூ ஷார்ட் – ஷிவம் துபே ஜோடியில் மேத்யூ ஷார்ட் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த ஷிவம் துபே 21 ரன்கள் எடுத்து போல்ட் அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஜேமி ஓவர்டன் 16 ரன்னில் வெளியேறினார். அன்ஷுல் கம்போஜ் 13 ரன்னும், நூர் அகமது ரன்னுக்கும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 184 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், சென்னை அணியை ஐதராபாத் 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் எஷான் மலிங்கா 3 விக்கெட்டையும், நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டையும், பிரபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன், ஷிவாங் குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

நாளை போட்டி

நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் 28-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு புதிய சண்டிகரின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் 29-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவாங் குமார், பிரபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன், எஷான் மலிங்கா.

சென்னை சூப்பர் கிங்ஸ்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், ஜேமி ஓவர்டன், மேத்யூ ஷார்ட், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங்.

இரு அணிகளின் இம்பாக்ட் வீரர்கள் பட்டியல்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஸ்மரன் ரவிச்சந்திரன், ஹர்ஷ் துபே, லியாம் லிவிங்ஸ்டோன், தில்ஷன் மதுஷங்கா, ஹர்ஷல் படேல்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஆயுஷ் மத்ரே, கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர், ராமகிருஷ்ண கோஷ், மாட் ஹென்றி



Thank You

Related Posts

“இனி இந்தப் பாதையை கடக்க ஈரானின் அனுமதி தேவைப்படும்” – ஈரான் | “From now on, Iran’s permission will be required to cross this route.” — Iran

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே வேளையில், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்கா – ஈரான் போருக்கு மத்தியில் பாகிஸ்தானில் ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தையில்…

Hit Songs: மனோரமா பாடிய டப்பாங்குத்து பாடல்கள்.! சென்னை தமிழில் பாட்டுப்பாடி மனசை மயக்கிய ராட்சசி! | Hit Songs Dappankuthu Songs Sung By Manorama The Enchanting Diva Who Mesmerized Hearts With Chennai Tamil

தமிழ் திரையுலகின் ஈடுஇணையற்ற கலைத்தாய், ‘ஆச்சி’ மனோரமா அவர்கள் ஒரு நடிப்புப் பல்கலைக்கழகம் என்பது நாம் அறிந்தது. ஆனால், நடிப்பையும் தாண்டி தனது வெண்கலக் குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்ட ஒரு அபூர்வ பாடகி அவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 9 views
40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • By admin
  • April 19, 2026
  • 8 views
அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

  • By admin
  • April 19, 2026
  • 7 views
சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

  • By admin
  • April 19, 2026
  • 6 views
ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
.site-info { display: none; }