– விளம்பரம் –
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதிய வேளையில் இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியது.
ஆர்.சி.பி அணியை வீழ்த்தியதற்கு பிறகு : கே.எல் ராகுல் பேச்சு
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. அதன் காரணமாக 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு டெல்லி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடி டெல்லி அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 179 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட கே.எல் ராகுல் கூறியதாவது : இந்த மைதானத்தில் போட்டியின் ஆரம்பத்தில் பந்து சற்று நின்று வந்தது அதனால் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் பெங்களூரு அணி முதல் பாதியில் சிறப்பாகவே செயல்பட்டது. பிறகு நாங்கள் ஒரு நல்ல இலக்கை சேசிங் செய்ய ஆரம்பித்ததும் பவர்பிளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தோம்.
அதிலும் குறிப்பாக போட்டியின் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்ததால் முதல் 6 ஓவர்கள் விளையாடுவது கடினமான ஒன்றாக மாறியது. இருந்தாலும் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை விழுந்ததும் நாங்கள் ஒரு திட்டத்தை தீட்டினோம். அதாவது நல்ல கிரிக்கெட்டை விளையாடி ப்ராப்பரான ஷாட்டுகளை அடித்தால் நிச்சயம் பௌண்டரிகள் கிடைக்கும். அப்படி பவுண்டரிகள் வரும்போது பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் திரும்பும்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம்.. டெல்லி அணிக்கெதிரான போட்டிக்கு பிறகு – பட்டிதார் வருத்தம்
எனவே பெரிய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ப்ராப்பர் கிரிக்கெட்டை விளையாட நினைத்தோம். இறுதியில் நாங்கள் நினைத்தது போலவே ரன்களும் வந்தது. இறுதி நேரத்தில் ஸ்டப்ஸ் மற்றும் மில்லர் ஆகியோர் மிகச் சிறப்பாக முடித்துக் கொடுத்தனர். சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, பிரான்சைஸி கிரிக்கெட்டிலும் சரி அவர்கள் இதுபோல் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். அதனால் கடைசி நேரத்தில் எங்களுக்கு எந்த ஒரு பதட்டமும் இல்லை என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்