பும்ரா இந்த பிரச்சனையை மட்டும் சரி செய்தால் தானாக விக்கெட்டுகள் கிடைக்கும்





இர்பான் பதான் மற்றும் பும்ரா


– விளம்பரம் –

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. அதனை தொடர்ந்து நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் தொடர் தோல்விகளை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் பரிதாப நிலையை சந்தித்துள்ளனர். இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் வாய்ப்பை அவர்கள் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்கிற ஒரு இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளனர்.

ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு அறிவுரை வழங்கிய இர்பான் பதான் :

இதன் காரணமாக மும்பை இந்தியன் அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகச் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் அந்த அணியின் அடுத்தடுத்து தோல்விகள் பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

– விளம்பரம் –

அதிலும் குறிப்பாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இதுவரை தான் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 19 ஓவர்கள் வீசியும் இதுவரை ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இப்படி அவரது பவுலிங் பார்ம் கவலைக்கிடமாக உள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இதுவரை விக்கெட் வீழ்த்தாத ஜஸ்ப்ரீத் பும்ராவின் பார்ம் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும் அவருக்கு ஆதரவாக முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் ஆதரவு தெரிவித்து சில அறிவுரைகளை அவர் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஜஸ்ப்ரீத் பும்ராவின் சுமாரான பார்ம் தற்போது மும்பை அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அவர் விக்கெட் வீழ்த்த முடியாமல் தவிப்பதற்கு காரணம் யாதெனில் :

– விளம்பரம் –

இதையும் படிங்க : ஆட்டநாயகன் விருதினை வென்றதோடு சேர்த்து விராட் கோலியையும் பின்னுக்கு தள்ளிய – சுப்மன் கில்

இந்த தொடரில் அவர் அதிகளவு மெதுவான பந்துகளை வீசுகிறார். அதுமட்டுமின்றி மெதுவான பந்துகளை ஷாட் பிட்ச் பந்துகளாகவும் வீசுகிறார். ஆனால் இனிவரும் போட்டியில் அவர் அதிக வேகத்தில் நிறைய பந்துகளை வீச வேண்டும். அதேபோன்று ஸ்லோவாக வீசும் பந்துகளையும் சற்று மேல் நோக்கி தேவைப்படும் நேரத்தில் வீச வேண்டும். இப்படி இரண்டு மாற்றங்களை அவர் செய்தால் நிச்சயம் அவருக்கு விக்கெட்டுகள் தானாக கிடைக்கும் என்று இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

3 விக்கெட் விழுந்ததும் எங்களோட திட்டம் இதுதான்.. பெங்களூரு அணியை வீழ்த்திய பிறகு

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி…

வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 9 views
40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • By admin
  • April 19, 2026
  • 8 views
அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

  • By admin
  • April 19, 2026
  • 7 views
சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

  • By admin
  • April 19, 2026
  • 6 views
ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
.site-info { display: none; }