“மீண்டும் திமுக ஆட்சி… விஜயின் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும்” – திருமாவளவன் பேட்டி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

TN Assembly Election 2026 | ”இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் ”என்று தெரிவித்தார்.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

“திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றும் “விஜய் வாங்குகிற வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்து, தமிழ்நாடு அரசியல் களம் மாறும்” என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

தமிழக தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவுதான். இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. சிறப்பு திருத்தம் மூலம் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வாக்குகள் நீக்கம் செய்யப்படாமல் இருந்து வாக்குப்பதிவு நடந்து இருந்தால் பழைய மாதிரியே வாக்குப்பதிவு நடந்து இருக்கும் என்று நாம் பேசி இருப்போம். ஆனால் சிறப்பு திருத்தம் மூலம் பதிவு செய்யப்படாமல் எண்ணிக்கையில் மட்டும் இருந்த லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் கூடுதலாக வாக்குப்பதிவு ஆகி இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. இது உண்மை இல்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் 5 ஆண்டுக்குப் பிறகு புதிய வாக்காளர்கள் 20 லட்சம் பேர் இணைவார்கள். அது எண்ணிக்கையில் கூடுதலாக சேரும். இந்த தேர்தலில் 20 முதல் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ந்து உள்ளனர் அவ்வளவுதான். இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும். களத்தில் நேரடியாக மக்களை சந்தித்த அனுபவத்தில் இருந்து உணர்கிறோம்.”என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். தற்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது என்ற  கேள்விக்கு பதிலளித்த அவர், “தொங்கு சட்டமன்றம் அமையும் என்று நான் சொல்லவில்லை. தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும் என்றுதான் சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் வாங்குகிற வாக்குகள் சதவீதத்தைப் பொறுத்து, தமிழக அரசியல் சூழல் மாறும் என்ற பொருளில் சொல்லி இருந்தேன்; அவ்வளவுதான். தேர்தல் முடிவு வரட்டும்” என அவர் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

“மீண்டும் திமுக ஆட்சி… விஜயின் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும்” – திருமாவளவன் பேட்டி

Thank You

Related Posts

காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 25, 2026 12:25 PM IST ஊட்டியை அடுத்துள்ள பைகமந்து கிராம பகுதியில் விவசாயிகளின் நிலங்களில் வெள்ளைப் பூண்டு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. + ஊட்டி மலைப்பூண்டு மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் பல்வேறு மலை காய்கறி…

ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 24, 2026 9:55 PM IST புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார் ராம்குமார் கொலை வழக்கு பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

இப்படி பண்ணா மத்தவங்க என்ன பண்ண முடியும்.. விராட் கோலி மேல கேஸ் கொடுங்க

  • By admin
  • April 25, 2026
  • 4 views
இப்படி பண்ணா மத்தவங்க என்ன பண்ண முடியும்.. விராட் கோலி மேல கேஸ் கொடுங்க

“மீண்டும் திமுக ஆட்சி… விஜயின் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும்” – திருமாவளவன் பேட்டி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 5 views
“மீண்டும் திமுக ஆட்சி… விஜயின் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும்” – திருமாவளவன் பேட்டி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

  • By admin
  • April 25, 2026
  • 6 views
மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 4 views
காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 25, 2026
  • 11 views
கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 10 views
இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam
.site-info { display: none; }