– விளம்பரம் –
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 34-வது லீக் போட்டியில் விளையாடிய ஆர்.சி.பி அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது.
விராட் கோலியை புகழ்ந்து பேசிய : ரவிச்சந்திரன் அஷ்வின்
பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது போட்டியின் ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 206 ரன்களை குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 81 ரன்களையும், படிக்கல் 55 ரன்களையும் குவித்து அசத்தினர்.
– விளம்பரம் –
அதிலும் குறிப்பாக விராட் கோலி 44 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 81 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த இன்னிங்ஸ் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் விராட் கோலியின் இந்த அற்புதமான பேட்டிங் ஃபார்ம் குறித்து சில விடயங்களை ஜாலியாக பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : விராட் கோலி பேட்டிங் செய்யும் விதம் இல்லீகல். சின்னப் பையன் மாதிரி அவர் விளையாடுகிறார். சின்னசாமி மைதானத்தில் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் குஜராத் அணி கம்ப்ளைன்ட் கொடுக்கலாம். எல்லா வருஷமும் இப்படியே ஆடிட்டு இருந்தா என்ன செய்ய முடியும்? நேத்து விராட் கோலிக்கு பேட்ல பந்து படவே இல்லை.
– விளம்பரம் –
இதையும் படிங்க : விராட் கோலியிடம் இருக்கும் அந்த வெறி தான் எங்களையும் நல்லா விளையாட வைக்குது – தேவ்தத் படிக்கல் புகழாரம்
அதே நேரத்தில் கை வீசி அடிக்க முடியாத பந்தையும் கவர்ல தூக்கி அடிக்கிறார். ஜேசன் ஹோல்டர் நல்லா போட்டாலும் அவர் பந்தயம் லெக்சைடு வந்து சிக்ஸ் அடிக்கிறார். இப்படி பந்து பேட்டில் படாத வேளையிலும் மூளையை வைத்து ஆடினால் மத்தவங்க என்ன செய்ய முடியும்? என்று கலகலவென்று அஸ்வின் பேசியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்