தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றம்? புதிய ஆளுநராக அஜய் குமார் பல்லா நியமனம்? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

மணிப்பூர் ஆளுநராக இருந்துவரும் அஜய் குமார் பல்லா தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

செய்தி18
செய்தி18

மேற்கு வங்க ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் ராஜினாமா செய்துள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு அஜய் குமார் பல்லா ஆளுநராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் மேற்கு வங்கத்தின் ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் மேற்கு வங்கத்தில் வென்று ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலத்தின் ஆளுநராக சி.என். ஆனந்த் போஸ், மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இருக்கும் சர்ச்சைகளைப் போலவே மேற்கு வங்க மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயும் சர்ச்சைகளும், சலசலப்புகளும் இருந்துவருகின்றன.

இதையும் படிங்க: திமுக – காங்கிரஸ் கூட்டணி; “நாங்கள் தியாகம் செய்திருக்கிறோம்” – மாணிக்கம் தாகூர்

இந்த 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு தேர்தல் வரவிருக்கிறது. இந்தச் சூழலில் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் சி.என். ஆனந்த் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதும், அம்மாநில ஆளுநராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட இருக்கிறார் என மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில், “சி.என். ஆனந்த் போஸ் தனது ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணத்தை இதுவரை எனக்கு தெரியப்படுத்தவில்லை.

மேலும், ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் எனக்குத் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக என்னிடம் எந்த ஒரு கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மணிப்பூர் ஆளுநராக இருந்துவரும் அஜய் குமார் பல்லா தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.



Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 10 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?
.site-info { display: none; }