கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
Assembly Election | தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல்களின் போது வாக்காளர்கள், எங்கே வாக்களிப்பது என்பது குறித்த விவரங்களை, வாக்காளர்களின் படங்களுடன் தேர்தல் ஆணையம் விநியோகித்து வந்தது.
தமிழ்நாட்டில், சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் முக்கிய அப்டேட் கொடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல்களின் போது வாக்காளர்கள், எங்கே வாக்களிப்பது என்பது குறித்த விவரங்களை, வாக்காளர்களின் படங்களுடன் தேர்தல் ஆணையம் விநியோகித்து வந்தது.
இந்நிலையில், இந்த முறை, வாக்காளர் படங்களுடன் கூடிய சீட்டுக்குப் பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு மட்டுமே வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக கொடுக்கப்பட்டு வந்த வாக்காளரின் படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுக்குப் பதிலாக, வாக்காளர் விவரங்கள் அடங்கிய சீட்டு மட்டுமே வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் வாக்காளர் தகவல் சீட்டு, வாக்குப்பதிவு செய்வதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார், பாஸ்போர்டு, பான் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்களை காட்டி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணம் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் வாக்களிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு