தமிழ்நாட்டில் ரூ.42.62 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்.. தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

தமிழ்நாட்டில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து 42.62 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்களைப் பறிமுதல் செய்ததாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா பட்நாயக்
அர்ச்சனா பட்நாயக்

தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 42 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்களைப் பறிமுதல் செய்திருப்பதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 27 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேளானந்தல் கிராமத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 53 ஐம்பொன் சிலைகள், பித்தளை சிலைகள், சுமார் 4 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் அகே உரிய ஆவணங்கள் இன்றி ஆம்னி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 37 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில், இதுவரை சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள், 16 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள், 3 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், 2 கோடியே 37 லட்சம் மதிப்பிலான பணம், 18 லட்சம் மதிப்பிலான மதுபானம் என மொத்தம் 42 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்களைப் பறிமுதல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



Thank You

Related Posts

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 2 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!
.site-info { display: none; }