`படையப்பா’ பெயர் படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார்: ரஜினிகாந்த்  – Kumudam

இந்த நிலையில், ‘படையப்பா’ படத்தின் உருவாக்கம் குறித்து ரஜினிகாந்த் சுவாரஸ்யமான வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார்.

”நான் கடந்த 1996-ல் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தேன். அப்போதுதான் படையப்பா படம் எடுத்துக்கொண்டிருந்தோம். நீலாம்பரி பாத்திரம் குறித்து அப்போது வதந்தி பரவியது.

படம் வெளியான பின்பு ஜெயலலிதா, படையப்பா படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லியிருந்தார். சிலர் ஜெயலலிதாவிடம் படத்தை காண்பிக்க வேண்டாம் என பயந்தார்கள்.

அதில் என்ன இருக்கிறது என்றுகூறி, நான் பட ரீலை, போயஸ் தோட்ட இல்லத்துக்கு அனுப்பி வைத்தேன். படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என சொன்னார் என கேள்விப்பட்டேன். அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்.

பொன்னியின் செல்வன் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நந்தினி கதாபாத்திரம் அதிகமாக பிடிக்கும். அதற்காக நான் உருவாக்கிய படம்தான் படையப்பா.  அதில், நீலாம்பரி என்றாலே ஐஸ்வர்யா ராய் தான் மைண்டுக்கு வருவார்

அவருக்காக பல மாதங்கள் காத்திருந்தோம். ஒருவேளை ஒரு வருடம் காத்தருக்க சொல்லி இருந்தால் கூட நான் காத்திருந்து இருப்பேன். ஏனென்றால் நீலாம்பரி பாத்திரம்தான் படமே. அதன் பிறகுதான் ஐஸ்வர்யா ராய்க்கு இதில் நடிக்க விருப்பம் இல்லை என தெரிந்தது.

அதன் பின் அவரை தொந்தரவு செய்யவில்லை. அதன் பின் ரவிக்குமார்தான் ரம்யா கிருஷ்ணன் பெயரை சொன்னார். எனக்கு அரைமனதாக இருந்தது. ஆனால் நேரில் அவர் கண்ணில் இருக்கும் பவரை பார்த்த பின் முடிவு செய்துவிட்டேன்”

படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என யோசித்த போது, டக்கென `படையப்பா’ என தோன்றியது. என்னுடைய நிறைய்ய படங்களுக்கு நான் தான் தலைப்பு வைத்திருக்கிறேன். ஆனால் படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார். இருந்தாலும் நான் என் பிடியிலிருந்து மாற மாட்டேன் என அவருக்கு தெரிந்ததால் சம்மதித்தார். பின்பு ஒரு முறை தயானந்த சரஸ்வதியை சந்தித்த போது இந்த தலைப்பை கூறினேன், அவர் அட ஆறுபடையப்பா போல் இருக்கிறது என்றார். பின்பு தான் முருகனின் வேல் இருப்பதை சேர்த்தோம்.

படையப்பா திரைப்படம் எந்த ஓடிடி தளத்துக்கும் உரிமம் கொடுக்கப்படவில்லை. இப்படம் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும்”. என அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Thank You

Related Posts

Venmathi Venmathiye – Madhavan, Reemma Sen – Minnale – Tamil Songs – Ahatamil

This Tamil song, Venmathi Venmathiye from the movie Minnale is a heart touching song featuring Madhavan and Reemma Sen. ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம்…

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை – Kumudam

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் வா வாத்தியார் படம் பல பிரச்னைகளை கடந்த 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து நலனின் படம் ரிலீஸாவதால் பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கிறது. ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு கல்தா: புதிய தலைவர் ரேஸில் முந்துவது யார் ? – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 10 views
தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு கல்தா: புதிய தலைவர் ரேஸில் முந்துவது யார் ? – Kumudam

`படையப்பா’ பெயர் படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார்: ரஜினிகாந்த்  – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 5 views
`படையப்பா’ பெயர் படை, சொறி என கிண்டல் செய்வார்கள் என ரவிக்குமார் தயங்கினார்: ரஜினிகாந்த்  – Kumudam

மத்தியப் பிரதேசத்தை ஆராயுங்கள்: இந்தியாவின் இதயப் பகுதிக்கான நுழைவாயில் – TN செய்திகள்

  • By admin
  • April 28, 2026
  • 6 views
மத்தியப் பிரதேசத்தை ஆராயுங்கள்: இந்தியாவின் இதயப் பகுதிக்கான நுழைவாயில் – TN செய்திகள்

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 3 views
தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – Kumudam

19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மிக மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ்

  • By admin
  • April 28, 2026
  • 7 views
19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மிக மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ்

பணம் பிரிப்பதில் தகராறு? பாஜக நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல்… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 28, 2026
  • 9 views
பணம் பிரிப்பதில் தகராறு? பாஜக நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல்… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }