– விளம்பரம் –
இந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய 19 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டிகள் ரசிகர்கள் மத்தியிலும் மிகச் சிறப்பான பொழுதுபோக்கை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த தொடரின் பாதி போட்டிகள் கிட்டத்தட்ட நடைபெற்று முடிந்துள்ளன. இவ்வேளையில் ஏப்ரல் 27-ஆம் தேதியான இன்று இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் போட்டியானது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிகழ்த்திய மோசமான வரலாற்று சாதனை :
இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது விளையாடி வருகிறது.
– விளம்பரம் –
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் 6 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 13 ரன்கள் மட்டுமே அடித்து 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையை சந்தித்துள்ளது. போட்டியின் முதல் ஓவரிலேயே முதல் விக்கெட் இழந்த டெல்லி அணி, இரண்டாவது ஓவரில் 2 விக்கெட்டுகளையும், மூன்றாவது ஓவரில் 2 விக்கெட்டுகளையும், நான்காவது ஓவரில் ஒரு விக்கெட்டையும் என அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது.
இதன் காரணமாக முதல் 4 ஓவர்களின் முடிவில் 9 ரன்களை மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் பவர்பிளேவின் முடிவில் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன் மூலம் 19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் இல்லாத மோசமான ஒரு சாதனைக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆளாகியுள்ளது. அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் :
– விளம்பரம் –
இதையும் படிங்க : முதல் வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் விராட் கோலி – 11 ரன்களே தேவை
இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் பவர்பிளேவில் குறைந்த ரன்களை அடித்த அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் இருந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது பெங்களூரு அணிக்கு எதிராக அவர்கள் பவர்பிளேவின் முடிவில் 14 ரன்களை அடித்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். இதுவே மோசமான பவர்பிளே ரன்களாக இருந்த வேளையில் அவர்களை கடந்து தற்போது 13 ரன்களுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அந்த மோசமான சாதனையில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்