– விளம்பரம் –
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய 8 போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கின்றது. எனவே இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியின் பிளேஆப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும். இதன் காரணமாக இனிவரும் ஒவ்வொரு போட்டியும் சென்னை அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது.
தோனியின் காயம் குறித்து பேசிய : ஸ்டீபன் பிளமிங்
இவ்வேளையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. ஏனெனில் இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்கள் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
– விளம்பரம் –
ஆனால் தற்போது நான்கு வாரங்களை கடந்தும் தொடரின் பாதி முடிந்தும் இன்னும் தோனி பிளேயிங் லெவனுக்குள் வரவில்லை. அதனால் அவர் இந்த சீசனில் விளையாடுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தோனியின் காயம் குறித்து அளித்துள்ள பேட்டி மேலும் கவலைக்குரிய ஒரு விடயமாக மாறியுள்ளது.
அந்த வகையில் ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது : தோனி மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் கடினமானது. முழுமையாக குணமடையும் முன்பே அவசரப்பட்டு அவரை விளையாட வைத்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி அவர் தற்போது பயிற்சிகளை தொடங்கிய போதும் மீண்டும் இரண்டாவது முறையாக காயம் அடைந்தார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : தோல்வியை சந்தித்தாலும் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி அசத்திய லக்னோ பவுலர் மோஷின் கான் – விவரம் இதோ
அது அவருக்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. அதனால் நாங்கள் நினைத்ததை விட அவர் களத்திற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதன் காரணமாக தோனி இந்த தொடரை முற்றிலுமாக தவறவிடுவாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்