– விளம்பரம் –
லக்னோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளுமே 20 ஓவர்களின் முடிவில் தலா 155 ரன்களை குவிக்க போட்டி டிராவில் முடிவடைந்தது. பின்னர் சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியானது லக்னோ அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
சூப்பர் ஓவரை வீசியது ஏன்? சுனில் நரேன் விளக்கம் :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததை அடுத்து கொல்கத்தா அணி சூப்பர் ஓவரை வீச தயாராகியது. அந்த அணி சார்பாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் பந்துவீச வந்தார். அவருக்கு எதிராக லக்னோ அணி சார்பாக நிக்கோலஸ் பூரான் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் பேட்டிங் செய்ய வந்தனர். அப்படி முதல் பந்தை வீசிய சுனில் நரேன் நிக்கோலஸ் பூரானை க்ளீன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.
– விளம்பரம் –
பின்னர் இரண்டாவது பந்தில் ரிஷப் பண்ட் ஒரு ரன்னை அடிக்க மூன்றாவது பந்தில் எய்டன் மார்க்ரம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக ஒரு ரன் மட்டுமே லக்னோ அணியால் அடிக்க முடிந்தது. பின்னர் இரண்டு ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் சூப்பர் ஓவரை அணுகிய கொல்கத்தா அணி முதல் பந்திலேயை 4 ரன்களை அடித்து அட்டகாசமான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சூப்பர் ஓவரை வீசியதற்கு பிறகு தன்னுடைய செயல்பாடு குறித்தும் தான் ஏன் சூப்பர் ஓவரை வீச வந்தேன்? என்பது குறித்தும் சுனில் நரேன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததை அடுத்து அணியில் உள்ள அனைவருமே சூப்பர் ஓவரை வீச என்னை தேர்வு செய்தார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக அனைவரும் என் மீது நம்பிக்கை வைக்கும் போது கடைசி ஓவரை நான் வீசுவது மிகச் சரியான ஒன்று என்று நினைத்தேன்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : லக்னோ அணிக்கெதிரான இந்த போட்டியில் என்னுடைய பேட்டிங் பிளான் இதுதான் – ஆட்டநாயகன் ரிங்கு சிங் பேட்டி
அதோடு இந்த சூப்பர் ஓவரில் நாங்கள் முதலில் பந்து வீசுவதால் என்னால் சற்று ரிலாக்ஸாக பந்துவீச முடிந்தது. இந்த போட்டியில் பயிற்சியாளர்கள், அணியின் உதவி நிர்வாகிகள் மற்றும் சக வீரர்கள் என அனைவருமே என்னை பந்துவீச அழைத்தனர். அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நான் பந்து வீச வருகிறேன் என்று கூறி அவர்களது நம்பிக்கையும் காப்பாற்றியுள்ளேன் என சுனில் நரேன் கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்