LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் (ஏப்ரல் 26) லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது.

இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட விறுவிறுப்பான சூப்பர் ஓவரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ரிங்கு சிங்
ரிங்கு சிங்

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

விருது வென்ற பிறகு பேசிய ரிங்கு சிங், ” நான் பேட்டிங் செய்யச் செல்லும்போது அணி ஏற்கனவே 3-4 விக்கெட்டுகளை இழந்திருந்தால், ஆட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்தி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பதில் தான் என் கவனம் இருக்கும்.

சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் ஓடி ஸ்ட்ரைக்கை எப்படி மாற்றுவது, எங்கே பவுண்டரிகளை அடிக்கலாம் என்பதைப் பற்றி யோசிப்பேன்.

ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எப்போதும் எனது முக்கிய குறிக்கோளாக இருக்கும்.

கடைசி ஓவர்களுக்காக சில ஷாட்டுகளைச் சேர்த்து வைக்க வேண்டும் என்பது போன்ற எந்த நிலையான திட்டமும் என்னிடம் இல்லை. அந்தந்த சூழலுக்கு ஏற்பவே நான் செயல்படுவேன்.

பிறகு ஒரு ஸ்பின்னர் பந்து வீசுவதை உணர்ந்து, அதற்கேற்ப எனது ஆட்டத்தை மாற்றிக்கொள்வேன்.

ரிங்கு சிங்
ரிங்கு சிங்

சிறுவயதிலிருந்தே எனக்கு ஃபீல்டிங் செய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். நான் உடற்தகுதியுடன் இருப்பதால், என்னால் வேகமாக ஓடி மைதானத்தை நன்றாக கவர் செய்ய முடிகிறது. நான் ஃபீல்டிங்கை மிகவும் ரசித்து செய்கிறேன்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து சூப்பர் ஓவர் கேட்சிற்குத் தயாராக இருந்தீர்களா? என்ற கேள்விக்கு, ” உண்மையைச் சொல்லப்போனால், அந்த கேட்சிற்கு நான் தயாராக இருக்கவில்லை. பந்து வேறு எங்கையாவது செல்லும் என்று தான் நினைத்தேன், ஆனால் திடீரென்று அது என்னை நோக்கி வந்தது, நான் எப்படியோ அதைப் பிடித்துவிட்டேன்” என்று பதிலளித்திருக்கிறார்.

Thank You

Related Posts

Weekly Horoscope: வார ராசி பலன் 26.4.26 முதல் 2.5.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of April 26th to May 2nd

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் இந்த நுண்ணறிவு நிறைந்த வீடியோவில், பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர், ஏப்ரல் 26 – மே 2, 2026 வாரத்திற்கான தனது நிபுணர்…

“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில்நுட்பத்தில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது. ஷாலினி –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லண்டன் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அல்வா… கல்தா கொடுத்த தெலுங்கு நடிகை! – பரபரப்பு குற்றச்சாட்டு | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 27, 2026
  • 4 views
லண்டன் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அல்வா… கல்தா கொடுத்த தெலுங்கு நடிகை! – பரபரப்பு குற்றச்சாட்டு | பொழுதுபோக்கு செய்திகள்

மத்திய பிரதேச சுற்றுலாவின் அதிசயங்களை கண்டறியவும் – TN செய்திகள்

  • By admin
  • April 27, 2026
  • 2 views
மத்திய பிரதேச சுற்றுலாவின் அதிசயங்களை கண்டறியவும் – TN செய்திகள்

LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

  • By admin
  • April 27, 2026
  • 8 views
LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

  • By admin
  • April 27, 2026
  • 7 views
உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர… இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ | Kara To The Kerala Story 2 This Week Theatre And Ott Release Movies

  • By admin
  • April 27, 2026
  • 9 views
Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர… இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ | Kara To The Kerala Story 2 This Week Theatre And Ott Release Movies

ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டு கிளவுட்ஸ் கேரளா பிரீமியர் லீக் மோதல்

  • By admin
  • April 27, 2026
  • 7 views
ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டு கிளவுட்ஸ் கேரளா பிரீமியர் லீக் மோதல்
.site-info { display: none; }