“3 நாட்களில் முடிவு!” – கூட்டணி குறித்து ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

பாமக நிறுவனர் ராமதாஸ், 3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

செய்தி18
செய்தி18

கூட்டணி குறித்து 3 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரும் தனித்தனியே செயல்பட்டுவருகின்றனர். மேலும், இருவரும் தங்களுக்கே பாமக சொந்தம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அன்புமணியை பாமக தலைவர் என குறிப்பிட்டு அவரது தி.நகர் அலுவலக முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.

இதனையடுத்து, தங்கள் தரப்பையே தேர்தல் ஆணையம் பாமக என அங்கீகரித்துள்ளது என அன்புமணி தரப்பும், இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இதற்கிடையில், இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் சூழலில், தமிழ்நாடு அரசியல் கட்சிகளிடையே கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்துவருகிறது.

இந்நிலையில், அன்புமணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கை கோர்த்த நிலையில், ராமதாஸின் கூட்டணி நிலைப்பாடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையே கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்த நிலையில், தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். மாற்றங்கள் வருவது இயற்கை என்றும், ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் உறுதியாக இருப்போம் எனவும் ராமதாஸ் குறிப்பிட்டார்.



Thank You

Related Posts

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 2 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!
.site-info { display: none; }