தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை.. 4,900 பேர் மட்டுமே அனுமதி! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

தவெக தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெறும் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெறும் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் நுழைவுச்சீட்டு உள்ள 4,900 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அய்யாசாமிப்பட்டியில் இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முழுக்க, முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும், வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிகள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்கள் கண்டிப்பாக வர வேண்டாம் என்றும், பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு BOX-களிலும், 80% அளவில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thank You

Related Posts

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 6 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 6 – மதுகேசவ் பொற்கண்ணன் சொற்களுக்கு உயிர் இருக்கின்றது. என்னது? உயிரா? சொற்களுக்கா? ஆம் நண்பர்களே!  நாம் பேசும்போது ஏதோ வார்த்தைகள்தானே என்று அள்ளித் தெளித்து  பேசுவதாக எண்ணுகிறோம். ஆனால், அந்த சொற்களுக்கு உயிர்…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – மதுகேசவ் பொற்கண்ணன் நம் வாழ்வில் நம்முடன் இருக்கும் உறவுகளும், நண்பர்களும், நம்முடன் பேசுகின்றனர். நாமும் அவர்களுடன் பேசுகின்றோம். வீடுகளில் அலுவலகத்தில், தொழில் செய்யும் இடங்களில்  வாடிக்கையாளர் உரிமையாளர், பொதுவாழ்வில் உள்ள தலைவர்கள்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 9 views
மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

  • By admin
  • April 22, 2026
  • 10 views
வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

  • By admin
  • April 22, 2026
  • 7 views
டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

  • By admin
  • April 22, 2026
  • 5 views
லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா

  • By admin
  • April 22, 2026
  • 6 views
சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா
.site-info { display: none; }