டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22


பழைய ரேடியோக்களில் அலைவரிசை கிடைக்காதபோது வரும் `உஷ்’ என்ற இரைச்சலிலும், பழைய ஆண்டெனா தொலைக்காட்சிகளில் அலைவரிசை இல்லாதபோது திரையில் தெரியும் கறுப்பு-வெள்ளைப் புள்ளிகளிலும் நமது பிரபஞ்சத்தின் தொடக்க கால அதிர்வுகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?!

இரைச்சல் சத்தம்
இரைச்சல் சத்தம்

சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தபோது அளப்பரிய ஆற்றலும் ஒளியும் உருவானது. பிரபஞ்சம் விரிவடைந்து குளிர்வடையத் தொடங்கியதும், அந்தத் தொடக்க கால ஒளியின் அலைநீளம் நீண்டு, இன்று அது நுண்ணலைகளாக (Microwaves) மாறியுள்ளது.

இதற்கு அண்ட நுண்ணலை பின்னணிக் கதிர்வீச்சு (Cosmic Microwave Background – CMB) என்று பெயர். ரேடியோவில் அலைவரிசை இல்லாதபோது நாம் கேட்கும் சத்தத்தில் சுமார் 1% இந்தப் பெருவெடிப்பின் எச்சமான கதிர்வீச்சினால் ஏற்படுகிறது.

1965-ஆம் ஆண்டு, அர்னோ பென்சியாஸ் (Arno Penzias) மற்றும் ராபர்ட் வில்சன் (Robert Wilson) என்ற இரு விஞ்ஞானிகள், நியூஜெர்சியில் ஒரு பெரிய ரேடியோ ஆண்டெனாவைச் சோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விசித்திரமான இரைச்சல் பின்னணியில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

அது நியூயார்க் நகரத்தின் இரைச்சலாக இருக்குமோ அல்லது ஆண்டெனாவில் தங்கியிருந்த புறாக்களின் எச்சத்தால் ஏற்பட்ட சத்தமாக இருக்குமோ என நினைத்து, ஆண்டெனாவை முழுமையாகச் சுத்தம் செய்தனர். ஆனாலும் அந்த `உஷ்’ இரைச்சல் சத்தம் நிற்கவில்லை.

அந்தச் சத்தம் பூமியில் இருந்தோ, நமது சூரிய குடும்பத்தில் இருந்தோ வரவில்லை; ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் அனைத்துத் திசைகளில் இருந்தும் சீராக வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான மறுக்க முடியாத ஆதாரமாக இது அமைந்தது. இதற்காக 1978-ல் இவர்களுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

இரைச்சல் சத்தம்
இரைச்சல் சத்தம்

இந்த CMB கதிர்வீச்சுதான் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பழமையான ஒளியாகும். இந்த நுண்ணலைகளை மனிதக் கண்களால் பார்க்க முடியாது. ஆனால், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஆண்டெனாக்கள் இவற்றை உணர்ந்து இரைச்சலாக வெளிப்படுத்துகின்றன.

இனிமேல் ரேடியோவிலோ டிவியிலோ அலைவரிசை கிடைக்காத அந்தச் சலிப்பான இரைச்சலைக் கேட்கும்போது எரிச்சலடைய வேண்டாம்.

நாம் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையான பிரபஞ்சத்தின் முதல் மூச்சுக்காற்றை, பெருவெடிப்பின் எதிரொலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்!



Thank You

Related Posts

ஆசிய கோப்பை ஹாக்கி; 5-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்தியா vs மலேசியா ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் 2023: ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற…

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தமிழ் செய்திகள்: ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கியது. வருகிற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 8 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 9 views
மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

  • By admin
  • April 22, 2026
  • 9 views
வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

  • By admin
  • April 22, 2026
  • 7 views
டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

  • By admin
  • April 22, 2026
  • 4 views
லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா

  • By admin
  • April 22, 2026
  • 6 views
சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா
.site-info { display: none; }