ஆசிய கோப்பை ஹாக்கி; 5-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி


இந்தியா vs மலேசியா ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் 2023: ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வென்ற பிறகு, இந்தியா அணி பலம் வாய்ந்த ஜப்பானிடம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. ஜப்பான் அணி தற்போது அட்டவணையில் 2வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், மலேசியா அணி பாகிஸ்தான் (3-1), மற்றும் சீனா (5-1) ஆகியவற்றுக்கு எதிராக எளிதான வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது.

இந்தநிலையில், இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக பெனால்டி கார்னர் ஷாட்களை கோல்களாக மாற்றுவதில் வல்லவர். ஜப்பானுக்கு எதிரான டிராவில் இந்தியாவுக்காக ஒரே கோல் அடித்தவர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தான்.

இரு அணி வீரர்கள் விவரம்

இந்தியா: வருண் குமார், ஜர்மன்ப்ரீத் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், மன்தீப் சிங், கிரிஷன் பகதூர் பதக் (கோல் கீப்பர்), ஹர்மன்ப்ரீத் சிங், சுமித், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், சுக்ஜீத் சிங்

மலேசியா: மர்ஹான் ஜலீல், பைசல் சாரி, ஃபிர்ஹான் அஷாரி, ரஸி ரஹீம், ஃபைஸ் ஜலி, அசுவான் ஹசன், ஹபிசுதீன் உத்மான் (கோல் கீப்பர்), அபு கமல் அஸ்ராய், நஜ்மி ஜஸ்லான், முஹம்மது ஹசன், அமிருல் அஸாஹர்

இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் கார்த்தி செல்வம் 15 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். பின்னர் முதல் பாதி வரை யாரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் இரண்டாவது நிமிடத்தில் இந்தியா கோல் அடித்தது. ஹர்திக் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார்.

அடுத்த பத்து நிமிடங்களில் இந்தியாவுக்கு மற்றொரு கோல் கிடைத்தது. ஹர்மன்பிரீத் சிங் 42 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். மலேசிய அணி கோல் அடிக்க முடியாமலும், இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியாமலும் திணறியது. அடுத்ததாக குர்ஜந்த் சிங் 53 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். அடுத்த நிமிடத்திலே ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 5 கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தது.

மலேசிய அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



Thank You

Related Posts

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தமிழ் செய்திகள்: ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கியது. வருகிற…

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது நான்கு போட்டிகள் கொண்ட அர்ஜென்டினா சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை 2-2 என்ற கணக்கில் டிராவில் முடித்தது. தொடரின் கடினமான தொடக்கத்திற்குப் பிறகு, இந்திய அணி மீண்டும் போராடி, சுற்றுப்பயணத்தை உயர்நிலையில் முடிக்க அதன் இறுதி இரண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதமடித்த வெயில்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 7 views
தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதமடித்த வெயில்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘29’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வீடியோ வெளியீடு! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 21, 2026
  • 10 views
ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘29’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வீடியோ வெளியீடு! | பொழுதுபோக்கு செய்திகள்

Free CISSP Exam Braindumps – Latest Questions to Help You Pass Fast – TN News

  • By admin
  • April 21, 2026
  • 13 views
Free CISSP Exam Braindumps – Latest Questions to Help You Pass Fast – TN News

மதுரை சித்திரை திருவிழா: அம்பாள் பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் வீதியுல | Photo Album

  • By admin
  • April 21, 2026
  • 4 views
மதுரை சித்திரை திருவிழா: அம்பாள் பூதம் மற்றும் அன்ன வாகனத்தில் வீதியுல | Photo Album

ஆசிய கோப்பை ஹாக்கி; 5-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

  • By admin
  • April 21, 2026
  • 11 views
ஆசிய கோப்பை ஹாக்கி; 5-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஈரான்: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" – ஈரான் என்ன சொல்கிறது?

  • By admin
  • April 21, 2026
  • 9 views
ஈரான்: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" – ஈரான் என்ன சொல்கிறது?
.site-info { display: none; }