கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘29’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘29’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ரத்னகுமார். 2019-ம் ஆண்டு அமலா பால் நடிப்பில் உருவான ‘ஆடை’ படத்தை இயக்கியிருந்தார். 2022-ல் இவர் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ திரைப்படம் கவனம் பெற்றது.
இது தவிர்த்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ’லியோ’, ‘கூலி’ ஆகிய படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘29’. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் இணைந்து தயாரித்துள்ளனர்.
அறிமுக நடிகர் விது நாயகனாக நடித்துள்ளார். ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ளார். ஷேன் ரோல்டன் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் வரும் மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20, 2026 10:12 PM IST