ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 199 ரன்களை குவித்தது.
பும்ராவின் சாதனையை முறியடித்த அஷ்வினி குமார் :
பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 100 ரன்களுக்கு சுரண்டதால் 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக திலக் வர்மா சதம் அடித்து அசத்தியிருந்த வேளையில் பந்துவீச்சில் அஸ்வினி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், ராகுல் திவாதியா, ஷாருக்கான் மற்றும் ரஷீத் கான் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பும்ராவின் மாபெரும் சாதனை ஒன்றிணையும் முறியடித்து அசத்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 24 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இளம் வயதில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம் – இதை கவனிச்சீங்களா?
இந்த சாதனையை இவர் 23 ஆண்டுகள் மற்றும் 234 நாட்கள் என்கிற நிலையில் எடுத்துள்ளார். இவருக்கு முன்னதாக பும்ரா மற்றும் லாசித் மலிங்கா ஆகியோர் தங்களது 26 வயதில் மும்பை அணிக்காக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பதவி ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.