– விளம்பரம் –
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் பிளேஆப் சுற்றிற்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்பதனால் அடுத்தடுத்து வரும் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான போட்டிகளாக மாறியுள்ளது.
சி.எஸ்.கே அணிக்கு கம்பேக் கொடுக்கும் எம்.எஸ் தோனி :
இவ்வேளையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் தோனி இந்த தொடரின் ஆரம்பத்தில் அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டாலும் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது.
– விளம்பரம் –
அந்த வகையில் இந்த தொடரின் முதல் ஆறு போட்டிகளை தவறவிட்ட அவர் எப்போது மீண்டும் அணிக்கு திரும்புவார்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது. தற்போது 44 வயதாகும் தோனிக்கு இதுவே கடைசி தொடர் என்பதினால் இந்த தொடரில் அவரது ஆட்டத்தினை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இவ்வேளையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 23-ஆம் தேதி நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் விளையாட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம் யாதெனில் : காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ள அவர் தற்போது முழு உடற்தகுதியை எட்டியுள்ளதால் விக்கெட் கீப்பிங் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் எப்போதுமே விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளாத அவர் தற்போது அந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளதால் நிச்சயம் அவர் நாளைய போட்டியில் விளையாடுவார் என சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம் – அஷ்வின் கொடுத்த அட்வைஸ்
அதுமட்டும் இன்றி தற்போது சி.எஸ்.கே அணி சிக்கலில் சிக்கி இருக்கும் வேளையில் அவர் அணிக்குள் இருந்தால் நிச்சயம் அது அணிக்கு பாசிட்டிவான விடயமாக இருக்கும் என்பதனால் நாளைய போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் சஞ்சு சாம்சன் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
விளம்பரம்