கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
TN Election 2026 | நடிகைகள் கவுதமி, ஸ்ருதிஹாசன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்ஜே பாலாஜி, சூர்யா, சிவகுமார், டி.ஆர். ராஜேந்திரன், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச் சாவடியில் நடிகை திரிஷா வாக்கு செலுத்தினார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர். அதேபோல் திரைப்பிரபலங்களும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்தார்.
இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து மதுரவாயலில் வாக்கு செலுத்தினார். ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல் வாக்களித்தார். இதேபோல் நடிகைகள் கவுதமி, ஸ்ருதிஹாசன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்ஜே பாலாஜி, சூர்யா, சிவகுமார், டி.ஆர். ராஜேந்திரன், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இவர்களை போலவே காலை 11 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச் சாவடியில் நடிகை திரிஷா வாக்கு செலுத்தினார். தனது தாயுடன் வந்து வாக்கு செலுத்திய அவரிடம் மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திரிஷா, “கண்டிப்பாக அனைவரும் வாக்கு செலுத்துங்கள். அதனை மட்டும் இன்றைக்கு சொல்வேன்” என்று பேசினார்.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு
ஏப்ரல் 23, 2026 11:20 AM IST