– விளம்பரம் –
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எப்போது ஓய்வு பெறுவார்? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.
எம்.எஸ் தோனி இந்த ஆண்டு விளையாடுவாரா? : காசி விஸ்வநாதன்
ஏனெனில் தற்போது மகேந்திர சிங் தோனிக்கு 44 வயதாகிறது. இதன் காரணமாக அவர் விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் அவர் நிச்சயம் ஓய்வு பெறுவார் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி பல இளம் வீரர்களை தேர்வு செய்தது.
– விளம்பரம் –
அதோடு நான்கு விக்கெட் கீப்பர் பேட்டர்களையும் தேர்வு செய்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெற்று வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. தோனிக்கு சரியான மாற்றுவீரராக இருக்க வேண்டும் என்பதற்காகவே சஞ்சு சாம்சன் மிகப்பெரிய தொகைக்கு டிரேடிங் செய்யப்பட்டார். அதனால் நிச்சயம் இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறலாம் என்று தெரிகிறது.
இருந்தாலும் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே தோனி ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக செயலாளரான காசி விஸ்வநாதனிடம் தோனியின் இந்த ஆண்டு தோனி விளையாடுவாரா? என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : அக்சர் படேலை தாண்டி சூப்பர் 8 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடிக்க – என்ன காரணம்?
அதற்கு பதிலளித்த காசி விஸ்வநாதன் : “அவர் விளையாடுவார், அவர் விளையாடுவார்” என்று பதிலளித்துள்ளார். அவரது இந்த பதில் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரானது மார்ச் மாதம் இறுதியில் துவங்கவுள்ளது.
விளம்பரம்