– விளம்பரம் –
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியானது பிப்ரவரி 22-ஆம் தேதியான இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததால் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது.
அக்சர் படேலை தாண்டி வாஷிங்டன் சுந்தர் இடம்பிடிக்க என்ன காரணம்? :
இந்த போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என டாசின் போதே கேப்டன் சூரியகுமார் யாதவ் அறிவித்திருந்தார். கடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஓய்வு எடுத்துக்கொண்ட துணை கேப்டன் அக்சர் படேல் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
– விளம்பரம் –
இவ்வேளையில் அணியின் நலனுக்காக தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என்றும் இது ஒரு கடினமான முடிவு என்றாலும் அக்சர் பட்டேல் இந்த போட்டியை தவறவிடுகிறார் என்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அக்சர் பட்டேலை தாண்டி இடம் பிடிக்க என்ன காரணம்? என்பது குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
அந்த வகையில் போட்டி நடைபெறும் இந்த அகமதாபாத் மைதானத்தில் தான் வாஷிங்டன் சுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். எனவே இங்கு நிறைய போட்டிகளையும், பயிற்சிகளையும் வாஷிங்டன் சுந்தர் செய்திருப்பார் என்பதை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
– விளம்பரம் –
இதையும் படிங்க : விவாகரத்து வாங்கி பிரிந்தாலும் மனைவிக்கும், மகனுக்கும் விலையுயர்ந்த பரிசை அளித்த – ஹார்டிக் பாண்டியா
அதுமட்டும் இன்றி தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டரில் அதிகமாக இடது கை ஆட்டக்காரர்கள் இருப்பதினால் அவர்களுக்கு எதிராக அக்சர் பட்டேலை விட வலது கை சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசுவார் என்பதனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
விளம்பரம்