லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

PBKS vs LSG

– விளம்பரம் –

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அசத்தலான அதிரடியை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தங்களது மிக சிறப்பான ஆட்டத்தை இன்று வழங்கி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வகையில் இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்து அதிரடியான செயல்பாட்டை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை குவித்தது.

– விளம்பரம் –

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக பிரியான்ஷ் ஆர்யா 37 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர் என 93 ரன்களையும், கூப்பர் கானோலி 46 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் என 87 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை நோக்கி தற்போது லக்னோ அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த 2026 ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது. ஏற்கனவே இந்த தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 250 ரன்களை பதிவு செய்திருந்த வேளையில் அந்த ரன்களை இன்று தாண்டிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 254 ரன்களை குவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் முகமது ஷமியின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஜோப்ரா ஆர்ச்சர் – விவரம் இதோ

லக்னோ அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேனாகள் இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 21 சிக்ஸர்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை பொருத்தவரை இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணி தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வேளையில் இந்த போட்டியிலும் பஞ்சாப் அணியே வெற்றி பெறும் என்பதை பலரும் நம்பிக்கையாகவும் உள்ளது.

விளம்பரம்

Thank You

Related Posts

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

3 விக்கெட் விழுந்ததும் எங்களோட திட்டம் இதுதான்.. பெங்களூரு அணியை வீழ்த்திய பிறகு

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 8 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 7 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 14 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }