மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

இன்று காலை சென்னை சென்ட்ரல் – தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அப்போது, அரசின் நலத்திடங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினுடன் பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதனிடயே, சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன். மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்… என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு எக்ஸ் பதிவில், மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம். துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர். அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் – சிறுசேரி, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.

விமான நிலையம் – கிளாம்பாக்கம், கோயம்பேடு – பட்டாபிராம், பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம், தாம்பரம் – கிண்டி, கலங்கரை விளக்கம் – உயர்நீதிமன்றம், சிறுசேரி – கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!. சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! என பதிவிட்டுள்ளார்.

Thank You

Related Posts

Latest Cisco 350-401 ENCOR Exam Questions and Answers – Study Online Today – TN News

NEW QUESTION 1 Which two pieces of information are necessary to compute SNR? (Choose two.)   A.  EIRP B.  noise floor C.  antenna gain D.  RSSI E.  transmit power …

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

பிப்ரவரி 28, 2026 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில், தெஹ்ரான் உட்பட பல நகரங்களில் உள்ள ராணுவ மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 8 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 7 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 15 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }