– விளம்பரம் –
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
மீண்டும் சிறப்பான பார்முக்கு திரும்பிய வருண் சக்கரவர்த்தி :
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்சி 46 ரன்களையும், ஜெய்ஸ்வால் 39 ரன்களையும் குவித்தனர்.
– விளம்பரம் –
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது கொல்கத்தா அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக பந்து வீசிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த 2026 ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதன் காரணமாக அவரது பௌலிங் ஃபார்ம் மீது மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் கடைசியாக நடைபெற்ற முடிந்துள்ள 2 போட்டிகளில் கடந்த போட்டியின் போது இரண்டு விக்கெட்டுகளையும், இந்த போட்டியில் 3 விக்கெட்டையும் கைப்பற்றி மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
– விளம்பரம் –
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை அடித்து நொறுக்கி தனது சாதனையை தானே முறியடித்த அபிஷேக் சர்மா – விவரம் இதோ
கடந்த சில போட்டிகளுக்கு முன்னதாக அவரது பார்ம் மோசமாக இருந்ததன் காரணமாக அவரது பவுலிங்கில் உள்ள தந்திரத்தை எல்லா பேட்ஸ்மேன்களும் தெரிந்து கொண்டார்கள், இனி அவரது பந்துவீச்சு எடுபடாது என்றெல்லாம் பேசப்பட்டது வந்தது. ஆனால் தற்போது அவர் மீதிருந்த மோசமான பௌலிங் ஃபார்ம் குறித்த விமர்சனங்களுக்கு எல்லாம் தனது பந்துவீச்சின் மூலமே பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்