இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியானது ஏப்ரல் 26-ஆம் தேதியான் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
எம்.எஸ் தோனிக்கு இடமில்லை.. மற்றொரு வீரருக்கு வாய்ப்பு :
அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை அணி முதலில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி இடம் பெறுவாரா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வந்தது.
ஆனால் இந்த போட்டியில் டாசில் தோற்ற பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் அணியில் இருக்கும் மாற்றங்களை பற்றி பேசுகையில் எம்.எஸ் தோனி இந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. கடந்த போட்டியில் இடம் பெற்றிருந்த சர்பராஸ் கான் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக உர்வில் பட்டேல் அணியில் இணைந்திருந்தார்.
அவரை தவிர வேறெந்த மாற்றவும் இன்றைய போட்டியில் இல்லை ஏற்கனவே இந்த தொடரின் முதல் ஏழு ஆட்டங்களை தவறவிட்ட தோனி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியிலாவது அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் மீண்டும் ஒருமுறை வாய்ப்பை இழந்துள்ளார்.
இதையும் படிங்க : ருதுராஜ் கெய்க்வாட் மீது விமர்சனம் இருப்பது எனக்கும் தெரியும்.. அதுக்கு பதிலடி கண்டிப்பா இருக்கு – ஸ்டீபன் பிளமிங்
அதே வேளையில் அதிரடி ஆட்டக்காரரான உர்வில் பட்டேலுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் ஏற்கனவே 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ள சி.எஸ்.கே அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
பதவி எம்.எஸ் தோனிக்கு மீண்டும் இடமில்லை.. ஆனால் மற்றொரு இளம் அதிரடி வீரருக்கு இடம் – விவரம் இதோ முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.