அவர் வரும் வரை இஷான் கிஷன் தான் கேப்டன்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் ரைசர்ஸ்

இஷான் கிஷன்

– விளம்பரம் –

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது சீசனானது இந்த 2026 ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் துவங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தற்போது சொந்த மைதானங்களில் தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமனம் :

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஒரு சில அணிகளில் முக்கிய மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அதுகுறித்த தகவலும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த 2026 ஐபிஎல் தொடருக்கான சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

– விளம்பரம் –

அந்த வகையில் வெளியான அறிவிப்பில் : ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக 2026 டி20 உலக கோப்பை தொடரை தவறவிட்டார். அதனை தொடர்ந்து இன்னும் காயத்திலிருந்து முழுமையாக மீளாத அவர் எப்போது சன்ரைசர்ஸ் அணியுடன் இணைவார் என்பது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக தற்காலிக கேப்டனை நியமிக்க நினைத்த சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் சையத் முஷ்டாக் அலி தொடரை ஜார்கண்ட் அணியின் கேப்டனாக கைப்பற்றிய இஷான் கிஷன் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் விளையாடி வரும் வேளையில் அவரை ஆரம்ப கட்ட போட்டிகளுக்கு கேப்டனாக நியமித்துள்ளது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : இதெல்லாம் எல்லோருக்கும் நடக்கும்.. நீ யோசிக்காம ஆடு.. யுவ்ராஜ் குடுத்த அட்வைஸ் – அபிஷேக் சர்மா பேச்சு

இப்படி ஆரம்ப கட்ட போட்டிகளில் கேப்டனாக இஷான் கிஷன் செயல்படும் வேளையில் இந்த தொடரின் எந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷன் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக பேட் கம்மின்ஸ் கேப்டனாக தொடர்வார் என்றும் தெரிகிறது.

விளம்பரம்

Thank You

Related Posts

சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா

– விளம்பரம் – அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் 99…

அஷ்வின் சொன்னது தப்பே இல்ல.. 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்

– விளம்பரம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர இளம் ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான பார்மை வெளிப்படுத்தி சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரராக இருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 3 views
தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 9 views
மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

  • By admin
  • April 22, 2026
  • 10 views
வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

  • By admin
  • April 22, 2026
  • 7 views
டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

  • By admin
  • April 22, 2026
  • 5 views
லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது
.site-info { display: none; }