– விளம்பரம் –
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கைப்பற்றி அசத்தியது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வரும் ஆர்.சி.பி அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாத வேளையில் 2025 ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதோடு இந்த வெற்றியை ஆர்சிபி அணியின் வீரர்களும் கோலாகலமாக கொண்டாடியிருந்தனர்.
இம்முறையும் ஆர்.சி.பி அணி கோப்பையை ஜெயிக்க முடியும் : சுரேஷ் ரெய்னா
தற்போது நடப்பு சாம்பியனாக 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஆர்.சி.பி அணி தங்களது முதலாவது போட்டியில் மார்ச் 28-ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கின்றனர். இந்த தொடரிலும் தங்களது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டாவது கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் சொந்த மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
– விளம்பரம் –
இந்நிலையில் கடந்த 2025-ஆம் ஆண்டை போலவே இம்முறையும் கோப்பையை கைப்பற்ற ஆர்.சி.பி அணிக்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் சி.எஸ்.கே வீரரான சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : விராட் கோலி சின்னசாமி மைதானத்தை அடையும்போது சாம்பியன் பட்டத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என வீரர்களிடம் கண்டிப்பாக பேசுவார்.
அதோடு இது நமது அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி கிடையாது. மிகக் கடுமையான உழைப்பிற்கு பிறகு கிடைத்த வெற்றி அதனை தக்க வைக்க வேண்டும் என்று வீரர்களிடம் கண்டிப்பாக சொல்லுவார். தற்போதைய ஆர்.சி.பி அணியில் இந்தியாவுக்காக விளையாடிய 7 முதல் 8 வீரர்கள் இருக்கிறார்கள். அது அந்த அணிக்கு மிகப்பெரிய பலத்தை சேர்க்கும் விடயமாக மாறியுள்ளது.
– விளம்பரம் –
சிஎஸ்கே அணி கடந்த 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் தொடர்ந்து ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்போது இதேபோன்று இந்திய அணிக்காக விளையாடிய 7-8 வீரர்கள் சி.எஸ்.கே அணியில் இருந்தனர். அந்த நிலை தான் தற்போது ஆர்சிபி அணியிலும் இருக்கிறது. அதேபோன்று ஆர்.சி.பி அணியின் மிகப்பெரிய பலமே அவர்களின் பேட்டிங் ஆர்டரில் உள்ள தெளிவான நிலைதான்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை பெரும்பாலும் இம்பேக்ட் வீரராக பயன்படுத்துவது ஏன்? – மஹேலா ஜெயவர்த்தனே விளக்கம்
ஏனெனில் ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆர்டரில் சரியான இடத்திற்கு சரியான வீரர்கள் உள்ளனர். அதுமட்டும் இன்றி வெங்கடேஷ் ஐயர், தேவ்தத் படிக்கல் ஆகியோரும் கூடுதலாக அந்த அணிக்கு வலிமை சேர்த்துள்ளனர். எனவே நிச்சயம் இம்முறையும் அந்த அணி கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம்