En Kadhala | Naatpadu Theral – 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan – Ahatamil

இது ஒரு வித்தியாசமான பாட்டு. ஆமாம்! வயது வித்தியாசமான பாட்டு. வயதில் மூத்தவரை இளம்பெண் காதலிக்கும் காமம் கடந்த பாட்டு. காதலுக்குக் கண்ணில்லை; சிலநேரங்களில் வயது வேறுபாடும் இல்லை.

Song : En Kadhala

Lyricist: Vairamuthu

இசையமைப்பாளர்: என்.ஆர்.ரகுநந்தன்

பாடியவர்: ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இயக்குனர்: விஜய்

தயாரிப்பு: வைரமுத்து

கலைஞர்கள்: அனிகா சுரேந்திரன், யோகன் சாக்கோ

பாடல் வரிகள் :

என் காதலா காதல் வயது பார்க்குமா?

நானும் சின்னக் கன்று

என்று இன்று சிந்தை மாறுமா?

வயதால் நம் வாழ்வு முறியுமா?

வாய் முத்தம் வயது அறியுமா?

நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா

இருந்தும் நிலவு சொல்லி

இளைய அல்லி மலர்வதில்லையா?

என்வாழ்வில் தந்தை இல்லையே!

தந்தைபோல் கணவன் வேண்டுமே! *

ஆணும் பெண்ணும் சேர்வது

ஆசைப் போக்கில் நேர்வது

காதல் நீதி என்பது

காலம் தோறும் மாறுது

வெட்டுக்கிளியின் ரத்தமோ

வெள்ளையாக உள்ளது

விதிகள் எழுதும் ஏட்டிலே

விதிவிலக்கும் உள்ளது

ஆழி ரொம்ப மூத்தது

ஆறு ரொம்ப இளையது ஆறு

சென்று சேரும்போது

யாரு கேள்வி கேட்பது?

காதல் சிந்தும் மழையிலே

காலம் தேசம் அழியுதே

எங்கே சிந்தை அழியுதோ

காதல் அங்கே மலருதே!

அறிவழிந்து போனபின்

வயது வந்து தோன்றுமா?

பொருள் அழிந்து போனபின்

நிழல் கிடந்து வாழுமா?

அறமிருக்கும் வாழ்விலே

முரணிருக்கும் என்பதால்

முரணிருக்கும் வாழ்விலும்

அறமிருக்கும் இல்லையா?

Thank You

Related Posts

கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 10:02 PM IST கவின் நடிக்கும் 11வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் குடும்ப கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவின் கவின் நடிக்கும் 11வது திரைப்படம் குறித்த அறிவிப்பு…

Jana Nayagan | ஜனநாயகன் ‘லீக்’ – எடிட்டர் சங்கம் எடுத்த முக்கிய நடவடிக்கை!  | சினிமா செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 24, 2026 6:50 PM IST ஜனநாயகன் படக் காட்சிகள் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் தென்னிந்திய தொகுப்பாளர் சங்கம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. செய்தி18 தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து இறுதியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

  • By admin
  • April 25, 2026
  • 7 views
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

En Kadhala | Naatpadu Theral – 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan – Ahatamil

  • By admin
  • April 25, 2026
  • 4 views
En Kadhala | Naatpadu Theral – 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan – Ahatamil

சேவா சிந்து: கர்நாடகாவில் அரசு சேவைகளை சீரமைத்தல் – TN செய்திகள்

  • By admin
  • April 25, 2026
  • 5 views
சேவா சிந்து: கர்நாடகாவில் அரசு சேவைகளை சீரமைத்தல் – TN செய்திகள்

இப்படி பண்ணா மத்தவங்க என்ன பண்ண முடியும்.. விராட் கோலி மேல கேஸ் கொடுங்க

  • By admin
  • April 25, 2026
  • 8 views
இப்படி பண்ணா மத்தவங்க என்ன பண்ண முடியும்.. விராட் கோலி மேல கேஸ் கொடுங்க

“மீண்டும் திமுக ஆட்சி… விஜயின் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும்” – திருமாவளவன் பேட்டி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 8 views
“மீண்டும் திமுக ஆட்சி… விஜயின் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும்” – திருமாவளவன் பேட்டி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

  • By admin
  • April 25, 2026
  • 7 views
மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்
.site-info { display: none; }