ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

கொளுத்தும் கோடை வெயிலில் ஏசி, ஃபேன் இல்லாமல் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி? நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய வழிகள் முதல் இன்றைய ஸ்மார்ட் ஹேக்ஸ் வரை, வீட்டு வெப்பத்தைக் குறைக்க உதவும் 7 சூப்பர் வழிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் கோடை வெயிலடின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஃபேன் மற்றும் ஏசியை மட்டுமே நம்பி இருப்பது மின் கட்டணம் மட்டுமின்றி காற்றையும் வறட்சியாக்கிவிடும். ஆனால், நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக ஸ்மார்ட்டான கட்டிடக்கலை மற்றும் இயற்கையான காற்றோட்டத்தைப் பயன்படுத்தி வீட்டை கூலாக வைத்திருந்தார்கள். ஜன்னல்கள், திரைச்சீலைகள், தரை பராமரிப்பில் சில சின்ன மாற்றங்கள் செய்வதன் மூலம், உங்கள் வீட்டு வெப்பநிலையை சில டிகிரி குறைக்கலாம். இந்த 7 எளிய டிப்ஸ் வீடுகளுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தரும்.

தடிமனான கறுப்பு நிற ஸ்க்ரீன்களை விட, பாரம்பரியமான வெட்டிவேர் அல்லது சணல் தட்டிகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். மதிய நேரத்தில் இந்த தட்டிகள் மீது கொஞ்சம் தண்ணீர் தெளித்துவிடுங்கள். வெளியில் இருந்து வரும் சூடான காற்று, இந்த ஈரமான தட்டிகள் வழியாக வரும்போது, நீர் ஆவியாகி, வீட்டுக்குள் குளிர்ச்சியான காற்றைக் கொண்டு வரும். இது ஒரு இயற்கையான கூலர் போல் செயல்படுவது மட்டுமல்லாமல், வீட்டில் ஒரு இதமான நறுமணத்தையும் பரப்பும்.

வீட்டை எப்போதும் கூலிங்காக வைத்துக்கொள்ள ஜன்னல்களை எப்போது திறக்க வேண்டும். பகல் நேரங்களில் வெளியில் இருக்கும் அனல் காற்று உள்ளே வராமல் இருக்க ஜன்னல், கதவுகளை இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். சூரியன் மறைந்த பிறகு, வெளி வெப்பநிலை வீட்டுக்குள் இருக்கும் வெப்பநிலையை விடக் குறைந்ததும், வீட்டின் எதிர் எதிர் திசையில் உள்ள ஜன்னல்களைத் திறங்க வேண்டும். இது வீட்டில் தேங்கியுள்ள சூடான காற்றை வெளியேற்றி குளிர்ச்சியான காற்று உள்ளே வர வழிவகுக்கும்.

ஸ்நேக் பிளான்ட், மணி பிளான்ட் அல்லது கற்றாழை போன்ற செடிகளை ஜன்னல் அருகே வையுங்கள். செடிகள் ‘டிரான்ஸ்பிரேஷன்’ (Transpiration) செயல்முறை மூலம் காற்றில் ஈரப்பதத்தை வெளியிடுகின்றன. இது சுற்றுப்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், பால்கனியில் வளர்க்கப்படும் உயரமான செடிகள், சூரியனின் வெப்பம் நேரடியாக சுவரில் படுவதைத் தடுத்து, வீட்டிற்கு ஒரு கவசம் போல செயல்படும்.

பல வீடுகளில் பயன்படுத்தப்படும் மார்பிள் அல்லது கல் தரைகள், வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்ளும். மதிய நேரத்தில், குளிர்ந்த நீரால் இரண்டு அல்லது மூன்று முறை தரையைத் துடைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தரையில் உள்ள நீர் ஆவியாகும்போது, அறையில் உள்ள வெப்பத்தை அது உறிஞ்சிக்கொள்ளும். இந்த செயல்முறையால், வீட்டுக்குள் இருக்கும் காற்று லேசாகவும், இதமாகவும் இருப்பதை உணர முடியும்.

ஃபேன் காற்றைக் குளிர்விப்பதில்லை, ஃபேன் காற்று ஏசி போல் கூலாக வர வேண்டும் என்றால், ஒரு பெரிய பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை நிரப்பி, ஃபேனுக்கு முன்னால் வையுங்கள். ஃபேன் அந்த ஐஸ் கட்டிகள் மீது காற்றை வீசும்போது, அது குளிர்ச்சியான நீராவியை அறை முழுவதும் பரப்பும். உங்கள் சீலிங் ஃபேன் ‘கவுன்டர்-கிளாக்வைஸ்’ (Counter-clockwise) திசையில் சுற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் காற்று நேராகக் கீழ்நோக்கி வீசும்.

பழைய குண்டு பல்பு மற்றும் டியூப்லைட்கள் அறையில் ஒரு சின்ன ஹீட்டர் போல செயல்பட்டு வெப்பத்தை வெளியிடும். கம்ப்யூட்டர், டிவி, சார்ஜர்கள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் பிளக்கில் இருக்கும்போது வெப்பத்தை உருவாக்குகின்றன. எனவே, வெப்பத்தை வெளியிடாத LED பல்புகளைப் பயன்படுத்துங்கள். பயன்பாட்டில் இல்லாதபோது எலக்ட்ரானிக் சாதனங்களை அன்ப்ளக் செய்துவிடுங்கள். இது வீட்டுக்குள் அனல் அதிகரிக்காமல் தடுக்கும்.

Thank You

Related Posts

இப்படி பண்ணா மத்தவங்க என்ன பண்ண முடியும்.. விராட் கோலி மேல கேஸ் கொடுங்க

– விளம்பரம் – குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 34-வது லீக் போட்டியில் விளையாடிய ஆர்.சி.பி அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில்…

மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

ஒவ்வொரு வீட்டிலும் ஆணிவேராக இருக்கும் மாமியாருக்கு, உங்கள் அன்பை வெளிப்படுத்த பந்தினி புடவைகள் ஒரு சிறந்த தேர்வாகும். ஆரஞ்சு, பிங்க், பச்சை போன்ற நிறங்களில் கிடைக்கும் இந்த புடவைகளை எப்படி ஸ்டைல் செய்வது என்று இங்கே காணலாம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

  • By admin
  • April 25, 2026
  • 8 views
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

En Kadhala | Naatpadu Theral – 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan – Ahatamil

  • By admin
  • April 25, 2026
  • 4 views
En Kadhala | Naatpadu Theral – 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan – Ahatamil

சேவா சிந்து: கர்நாடகாவில் அரசு சேவைகளை சீரமைத்தல் – TN செய்திகள்

  • By admin
  • April 25, 2026
  • 6 views
சேவா சிந்து: கர்நாடகாவில் அரசு சேவைகளை சீரமைத்தல் – TN செய்திகள்

இப்படி பண்ணா மத்தவங்க என்ன பண்ண முடியும்.. விராட் கோலி மேல கேஸ் கொடுங்க

  • By admin
  • April 25, 2026
  • 8 views
இப்படி பண்ணா மத்தவங்க என்ன பண்ண முடியும்.. விராட் கோலி மேல கேஸ் கொடுங்க

“மீண்டும் திமுக ஆட்சி… விஜயின் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும்” – திருமாவளவன் பேட்டி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 8 views
“மீண்டும் திமுக ஆட்சி… விஜயின் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும்” – திருமாவளவன் பேட்டி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

  • By admin
  • April 25, 2026
  • 7 views
மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்
.site-info { display: none; }