DMK Will Win Once Again In Tamil Nadu Assembly Election 2026 Says O Panneerselvam | திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்… ஓபிஎஸ் தடாலடி – சூடுபிடிக்கும் தேர்தல் களம்


திமுக ஓ பன்னீர்செல்வம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கடைசி நாளாகும். “தமிழ்நாட்டின் முதல்வராக, நமது தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு அண்ணன் ஓபிஎஸ் வாழ்த்துகளோடு நன்றி கூறுகிறேன்” என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் சட்டப்பேரவையில் பேசியிருந்தார்.

Zee செய்திகளை விருப்பமான ஆதாரமாகச் சேர்க்கவும்

தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “ஐந்தாண்டுகால திமுக ஆட்சி நிறைவு பெற்றிருக்கிறது; அதனால் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்” என்றார். உங்களின் ஆதரவாளர் பேரவையில் பேசிய கருத்துகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “அவருடைய வாழ்த்துகள், எண்ணம், செயல்பாடு மற்றும் தமிழக மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ அதை அவர் சொல்லியிருக்கிறார். பொதுவான கருத்து, இன்றைய அரசியல் சூழலில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் செய்த சாதனைகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது” என்றார்.

தை பிறந்தாள் வழிப்பிறக்கும் என சொன்னீர்களே என்ற கேள்விக்கு, “தமிழ்நாட்டுக்கே வழி பிறந்துவிட்டது” என்றார். மேலும், திமுகவில் இணைய உள்ளீர்களா என்ற கேள்விக்கு, “பொறுமையாக இருங்கள்” என கூறிச் சென்றார். இதன்மூலம், ஓ.பன்னீர்செல்வம் கட்சியோ, அமைப்பையோ தொடங்கி திமுகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கலாம். இல்லையெனில் திமுகவில் இணைந்தும் செயல்படலாம். அதிமுகவில் அவருக்கு கதவு அடைக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் இந்த முடிவை நோக்கி நகர்ந்துள்ளார் என புரிந்துகொள்ள முடிவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தவெக பக்கம் ஓ.பன்னீர்செல்வம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்குமா என ஓ.பன்னீர்செல்வம் யோசித்திருக்கலாம். அதிமுக கதவடைத்த நிலையில், தனிக்கட்சி தொடங்குவது தயக்கம் இருப்பதாலும் திமுகவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் உடன் முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்ததும் இங்கு நினைவுக்கூரத்தக்கது. அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வம் திமுக சார்பு எடுப்பதாக எடப்பாடி பழனிசாமி பலமுறை கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக,  மமக, முஸ்லீம் லீக், மநீம, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிக உள்ளே வந்திருப்பதன் மூலம் காங்கிரஸ் மற்றும் மதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக தொடர்ந்து கிருஷ்ணாசாமியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக அணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. ராமதாஸ் தரப்பு பாமக, சசிகலா தரப்பினர் இன்னும் தங்களின் நிலைபாட்டை அறிவிக்கவில்லை.

மேலும் படிக்க | நிரபராதி என்பதை நிரூபிப்போம் – அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

மேலும் படிக்க | ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைக்கால சிறப்பு தொகை..! பெண்களுக்கு ஜாக்பாட்

மேலும் படிக்க | திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்… ஓபிஎஸ் தடாலடி – சூடுபிடிக்கும் தேர்தல் களம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android இணைப்பு: https://bit.ly/3AIMb22

ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3yEataJ





Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்
.site-info { display: none; }