ஜனநாயகன் பட சென்சார் சான்றிதழ் தரக்கோரிய வழக்கு: உயர்நீதி மன்றம் தள்ளுபடி  – Kumudam


விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன் தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கவும் உத்தரவிட்டாா்.

தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனிடையே, உச்ச நீதிமன்றத்தை படக்குழு நாடிய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் அளித்து வழக்கை மீண்டும் விசாரிக்க தனிநீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை பட தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சனையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்று கோரிய மனுவை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.



Thank You

Related Posts

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 6 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 6 – மதுகேசவ் பொற்கண்ணன் சொற்களுக்கு உயிர் இருக்கின்றது. என்னது? உயிரா? சொற்களுக்கா? ஆம் நண்பர்களே!  நாம் பேசும்போது ஏதோ வார்த்தைகள்தானே என்று அள்ளித் தெளித்து  பேசுவதாக எண்ணுகிறோம். ஆனால், அந்த சொற்களுக்கு உயிர்…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – மதுகேசவ் பொற்கண்ணன் நம் வாழ்வில் நம்முடன் இருக்கும் உறவுகளும், நண்பர்களும், நம்முடன் பேசுகின்றனர். நாமும் அவர்களுடன் பேசுகின்றோம். வீடுகளில் அலுவலகத்தில், தொழில் செய்யும் இடங்களில்  வாடிக்கையாளர் உரிமையாளர், பொதுவாழ்வில் உள்ள தலைவர்கள்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 9 views
மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

  • By admin
  • April 22, 2026
  • 10 views
வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

  • By admin
  • April 22, 2026
  • 7 views
டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

  • By admin
  • April 22, 2026
  • 5 views
லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா

  • By admin
  • April 22, 2026
  • 6 views
சனத் ஜெயசூர்யாவின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்த திலக் வர்மா
.site-info { display: none; }