சென்னை மாவட்டத்தில் 28,30,936 வாக்காளர்கள்:  பெரிய தொகுதி பெரம்பூர் , சின்ன தொகுதி  துறைமுகம்  – Kumudam


“இறுதி வாக்காளர் பட்டியல்” சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; இந்திய தேர்தல் ஆணைய உத்திரவின் படி சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 01.01.2026.ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று 23.02.2026 வெளியிடப்படுகிறது.

மேற்படி 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. மேலும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தாரரது பெயர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மாவட்டத்தில் 4079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும். குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 192 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி நடைப்பெற்று முடிந்த சிறப்பு தீவிரத் திருத்தத்தின்படி, சென்னை மாவட்டத்தில் 13,65,763 ஆண் வாக்காளர்களும், 14,64,344 பெண் வாக்காளர்களும் மற்றும் 829 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 28,30,936 வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக பெரம்பூர்  உள்ளது. இந்த தொகுதியில் 1,07.995 ஆண் வாக்காளர்கள், 1,14,726 பெண் வாக்காளர்கள், 71 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2,22,792 பேர் உள்ளனர். குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக  துறைமுகம் உள்ளது. இதில்  58,221 ஆண் வாக்காளர்கள், 58,620 பெண் வாக்காளர்கள், 55 மூன்றாம் பாலினத்தவர்கள் என 1,16,896 பேர் உள்ளனர்.



Thank You

Related Posts

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே – 3 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே  – 3 – மதுகேசவ் பொற்கண்ணன் ‘நீ தேடிக் கொண்டிருப்பது உன்னைத் தேடிக்கொண்ட்டிருக்கும்’ – ரூமி எத்தனை எத்தனை மனிதர்களைச் சந்தித்தாலும் கிடைக்காத ஒரு மகிழ்வும் சந்தோஷமும் ஒருவரைச் சந்தித்தவுடன் சட்டென பரவசம்…

“மீண்டும் திமுக ஆட்சி… விஜயின் வாக்கு சதவிகிதத்தை பொறுத்து தமிழக அரசியல் களம் மாறும்” – திருமாவளவன் பேட்டி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 25, 2026 3:05 PM IST TN Assembly Election 2026 | ”இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் ”என்று தெரிவித்தார். தொல். திருமாவளவன் “திமுக மீண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

  • By admin
  • April 25, 2026
  • 4 views
இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே – 3 – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 13 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே – 3 – Kumudam

ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

  • By admin
  • April 25, 2026
  • 8 views
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

En Kadhala | Naatpadu Theral – 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan – Ahatamil

  • By admin
  • April 25, 2026
  • 5 views
En Kadhala | Naatpadu Theral – 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan – Ahatamil

சேவா சிந்து: கர்நாடகாவில் அரசு சேவைகளை சீரமைத்தல் – TN செய்திகள்

  • By admin
  • April 25, 2026
  • 6 views
சேவா சிந்து: கர்நாடகாவில் அரசு சேவைகளை சீரமைத்தல் – TN செய்திகள்

இப்படி பண்ணா மத்தவங்க என்ன பண்ண முடியும்.. விராட் கோலி மேல கேஸ் கொடுங்க

  • By admin
  • April 25, 2026
  • 8 views
இப்படி பண்ணா மத்தவங்க என்ன பண்ண முடியும்.. விராட் கோலி மேல கேஸ் கொடுங்க
.site-info { display: none; }