டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 35 ஆவது போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அசத்தியது. அந்தவகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
பஞ்சாப் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் : அக்சர் படேல் வருத்தம்
அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை குவிக்க 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரமாண்ட இலக்கினை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது : இந்த மைதானத்தில் நாம் பவுலர்கள் ஏற்படுத்தி கொடுக்கும் வாய்ப்புகளை தவறவிடக்கூடாது. அப்படி கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிட்டால் இதுபோன்ற மோசமான தோல்விகள் நிகழத்தான் செய்யும். இந்த போட்டியில் நாங்க தோற்க தகுதியான அணி தான்.
ஏனெனில் இந்த போட்டியில் கையில் கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டோம். அப்படி பந்துவீச்சாளர்கள் ஏற்படுத்தி கொடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்டால் இதுபோன்ற மோசமான நிலையை சந்திக்க வேண்டியது மட்டும் தான் நிதர்சனம். பவர்பிளே ஓவர்களில் எங்களது பந்துவீச்சாளர்கள் நிறைய ரன்களை வழங்கி விட்டார்கள். அதற்கு பீல்டிங்கில் ஏற்பட்ட தவறுகளே காரணம்.
இதையும் படிங்க : கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம் – இமாலய சேசிங் சாதனை
டெல்லி போன்ற சிறிய மைதானத்தில் நிறைய சிக்சர்கள் அடிக்கத்தான் செய்வார்கள். அதற்கு ஏற்றாற்போன்று பந்துவீச்சில் சிறப்பான திட்டங்களுடன் வந்து விளையாட வேண்டியது அவசியம். இதுபோன்ற தோல்விகளில் இருந்து நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்கும். அதிலிருந்து தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.
பதவி இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல் முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.