கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தின் ஜனநாயகன் படத்தை லேப்டாப்பில் பார்த்து அக்காட்சியை முகநூலில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தின் ஜனநாயகன் படத்தை லேப்டாப்பில் பார்த்து அக்காட்சியை முகநூலில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் தவெக தலைவர் விஜயின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. இவர் அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள CCTV கண்காணிப்பு அறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தின் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் தனது லேப்டாப்பில் நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை பார்த்துள்ளார் யுவராஜ். படத்தை பார்த்தது மட்டுமல்லாது தான் படம் பார்த்த காட்சியை முகநூலில் பதிவிட்டு “ஓட்டு பெட்டி வர இடத்துல கூட நம்ம தளபதி என்ட்ரி தான்” என எழுதியிருந்தார் யுவராஜ்.
இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, சென்னை காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து யுவராஜை கோட்டூர்புரம் காவல்நிலைய காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு
ஏப்ரல் 28, 2026 12:41 PM IST